
சென்னை, வடபழனி அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் ஒரு புகழ்பெற்ற ஆன்மீகத் தலம். தற்போது, இக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த, தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தமிழ்நாடு அரசு வேலை என்பதால், தகுதியுடைய நபர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2025.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, மொத்தம் மூன்று பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேவார ஆசிரியர், இசை ஆசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த மூன்று பதவிகளுக்கும் மாத சம்பளம் ரூ.25,000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
• தேவார ஆசிரியர்: சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
• இசை ஆசிரியர்: குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு அல்லது இசையில் பட்டைய படிப்பு முடித்திருக்க வேண்டும்.
• தமிழ் ஆசிரியர்: தமிழில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பை hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, துணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை- 600 026 என்ற முகவரிக்கு, செப்டம்பர் 30, 2025 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.