மத்திய அரசின் கீழ் இயங்கும் பணம் அச்சிடும் நிறுவனத்தில் காலியாக உள்ள இடத்திற்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளநிலை டெக்னீசியன் பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: bank note press
பணியின் பெயர்: Junior Technician
காலி பணியிடங்கள்: 14
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் அடுத்த மாதம் 14 ஆம்தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://bnpdewas.spmcil.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் மாற்றுதிறனாளிகள் பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்
மேலும் படிக்க:ரேஷன் கடைகளில் 6,500 காலி பணியிடங்கள்...10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் லித்தோ ஆஃப்செட் மெஷின் மைண்டர், லெட்டர் பிரஸ் மெஷின் மைண்டர்,ஆஃப்செர்ட் பிரிண்டிங், பிளேட்மேக்கிங், எலக்டோபிளேட்டிங், பிளேட் மேக்கர் கம் இம்போசிட்டர், ஹேண்ட் கம்போஸிங் ஆகிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முழுநேரம் ஐடிஐ முடிந்திருக்க வேண்டும். அல்லது பிரிண்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,780 - ரூ.67,390 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:ரூ.1 லட்சம் மாத சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு.. விண்ணப்ப பதிவு தொடங்கியது..