பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்

Published : Jul 29, 2022, 01:15 PM IST
பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்

சுருக்கம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தில் junior Reasearch Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதற்கு தகுதியானவர்ளும் விருப்பமுள்ளவர்களும் உடனே விண்ணப்பிக்கும் படியும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் junior Reasearch Fellow பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதற்கு தகுதியானவர்ளும் விருப்பமுள்ளவர்களும் உடனே விண்ணப்பிக்கும் படியும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில்  junior Reasearch Fellow எனும் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

கல்வித்தகுதி:

Junior Reasearch Fellow  எனும் பணியிடத்திற்கு உயிரியல் துறையில் முதுகலை பட்டம் (M.Sc. in Zoology) பெற்றவர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .  

மேலும் படிக்க:இந்த நாட்களில் பள்ளிகள் கிடையாது.. மீறி வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை.. பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

கூடுதல் விவரங்கள்:

தற்போது அழைப்பு விடுத்துள்ள இந்த பணியிடத்திற்கு நேர்காணல் முறையில் (Interview) தேர்வு முறை நடைபெறவுள்ளது. மேலும் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதந்தோறு சம்பளமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35,000 வரை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இப்பணியானது, தற்காலிகமனது என்றும் நிரந்தரமான பணி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் gunasekaran@buc.edu.in எனும் மின்னஞ்சலுக்கு தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் அல்லது பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்பலாம் .

மேலும் படிக்க:மீண்டும் கல்குவாரி விபத்து.. பாறைகள் சரிந்து விழுந்து 2 பேர் உடல் நசுங்கி பலி.. ஆட்சியர் ஆய்வு

jrf_zoo.pdf (b-u.ac.in) எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பணி குறித்து கூடுதல் தகவல்களை படித்து அறிந்துக் கொள்ளலாம்  பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பலாம்.  பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

அஞ்சல் முகவரி

Dr. C. Gunasekaran, Principal,

Investigator-DST-SERB, Department of Zoology,

Bharathiar University, Coimtratore -641046,

Tamil Nadu.
 

PREV
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!