Bank jobs: 10th முடித்தவர்களுக்கு ரூ.37,000 சம்பளமா?! ஃபெடரல் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

Published : Jan 01, 2026, 06:48 AM IST
Bank Jobs 2026

சுருக்கம்

இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜனவரி 8, 2026-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

வங்கி வேலைக்காக காத்திருப்போருக்கு ஜாக்பாட்.!

இந்தியாவின் சிறந்த தனியார் வங்கிகளில் ஒன்றான ஃபெடரல் வங்கி, அதன் கிளைகள் மற்றும் அலுவல்களில் உள்ள தேவைகளுக்காக அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுகிறது. விண்ணப்பங்கள் ஜனவரி 8, 2026 வரை வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இந்த வேலைகள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கானவை.

தகுதி நிபந்தனைகள் 

டிசம்பர் 1, 2025 அன்று 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும், பட்டப்படிப்பு முடிக்காதவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம், கணினி அடிப்படை அறிவு தேவை. வயது 18 முதல் 20 வரை (பிறந்த தேதி டிசம்பர் 1, 2005 முதல் 2007 வரை), பட்டதாரிகளுக்கு 18 முதல் 25 வரை ரிலாக்ஸேஷன் உண்டு.

சம்பளம் மாதம் 19,500 ரூபாய் முதல் 37,815 ரூபாய் வரை, கூடுதல் நன்மைகள் உண்டு. தேர்வு ஆன்லைன்  தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும், தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, மதுரை போன்ற இடங்களில் தேர்வு நடைபெறும். சோதனையில் கணினி அறிவு, ஆங்கிலம், கணிதம் தலைப்புகளில் தலா 15 மதிப்பெண்ளுக்கு கேள்விகள் இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம் 

பொதுப்பிரிவினருக்கு 500 ரூபாய், பட்டதாரி இனத்தினருக்கு 100 ரூபாய், ஆன்லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்க வங்கி இணையதளத்தின் வேலைவாய்ப்பு பக்கத்திற்குச் சென்று விவரங்கள் நிரப்பி, புகைப்படம் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். முக்கிய தேதிகள்: கடைசி ஜனவரி 8, ஹால் டிக்கெட் ஜனவரி 23 வரை 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2026-ல் அரசு வேலை உறுதி.. இளைஞர்களுக்கு "குட் நியூஸ்".. TNPSC முதல் RRB வரை - முழு லிஸ்ட் இதோ!
2026-ல் வேலை தேடப்போறீங்களா? அப்போ கண்டிப்பா உங்க கையில் இருக்க வேண்டிய 9 AI டூல்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!