10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 19,000 சம்பளத்துடன் பாதுகாப்புத் துறை வேலை!

By SG Balan  |  First Published Apr 12, 2023, 5:07 PM IST

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்களில் பல்வேறு பணிகளில் வேலை பார்க்க பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தக்ஷின் பாரத் பகுதி (Dakshin Bharat Area) தென்னிந்திய தலைமை அலுவலகத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த வேலைவாய்ப்பை ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இளநிலை எழுத்தர், சமையலர், பல்நோக்குப் பணியாளர் என வெவ்வேறு பணிகளுக்கு ஆள் சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, தட்டச்சுத் தேர்வு ஆகிய தேர்வுகள் அடிப்படையில் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். சென்னையில் உள்ள தீவுத்திடலில் தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

காலிப் பணியிடங்கள்:

இளநிலை எழுத்தர் (Lower Division Clerk) 1

சமையலர் (Cook) 2

பல்நோக்குப் பணியாளர் (MTS -Messenger) 7

பல்நோக்குப் பணியாளர் (MTS Garderner) 2

எஞ்சினியரிங் படித்தவருக்கு மத்திய அரசு வேலை; ரூ.1.4 லட்சம் சம்பளம்! இப்பவே அப்ளை பண்ணுங்க

கல்வித் தகுதி:

இளநிலை எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு பூர்த்தி செய்திருக்க வேண்டும். மற்ற வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமாது.

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சி மற்றும் பழங்குடி பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு. இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்படுகிறது.

சம்பளம்:

இளநிலை எழுத்தர் - ரூ.19,900/-

சமையலர் - ரூ.19,900/-

பல்நோக்குப் பணியாளர் MTS (Messenger) - ரூ.18,000/-

பல்நோக்குப் பணியாளர்  MTS (Gardener) - ரூ.18,000/-

71 ஆயிரம் பேருக்கு வேலை! பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விருப்பமும் தகுதியும் உடையவர்கள் https://indianarmy.nic.in/ என்ற இந்திய ராணுவத்தின்  அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் தக்ஷின் பாரத் பகுதி அலுவலகத்தில் பணிபுரிவதற்கான இந்த வேலைவாய்ப்பு பற்றி மேலும் விரிவான தகவல்களை அறிந்துகொள்வதற்கு கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Dakshin Bharat Area Chennai Recruitment 2023 notification

click me!