இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC ADO Prelims Results 2023) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் காலியாகவுள்ள 9394 பயிற்சி மேம்பாட்டு அதிகாரிகள் பணியிடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் ப்ரிலிமினரி தேர்வு நடந்தது. எல்.ஐ.சி இதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள 8 மண்டலங்களிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தியது.
இதில் சென்னையை மையமாக கொண்ட தெற்கு மண்டலம் மற்றும் ஹைதராபாத்தை மையமாக கொண்ட தெற்கு மைய மண்டலம் ஆகியவற்றில் மட்டுமே 2924 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் ஆபிசர் ப்ரிலிம்ஸ் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எல்ஐசி இணையதளமான licindia.in இன் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பிரிலிம்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 23 ஆம் தேதி நடக்கும் மெயின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது? :
*licindia.in இல் உள்ள கேரர்ஸ் போர்ட்டலுக்குச் செல்லவும்.
*மண்டல வாரியாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. உங்கள் மண்டலத்திற்கான முடிவு இணைப்பைத் திறக்கவும்.
*PDF கோப்பைப் பதிவிறக்கி உங்கள் முடிவைப் பார்க்கவும்.
*எதிர்கால தேவைக்காக அதனை பதிவிறக்கம் செய்து சேமித்து கொள்ளுங்கள்.
*மெயின் தேர்வு பற்றிய கூடுதல் தகவலுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எல்ஐசி இந்தியா இணையதளத்தை தவறாமல் பார்வையிட வேண்டும்.
இதையும் படிங்க: 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எப்போது? கடைசி வேலைநாள் இதுதான்.! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!