ரயில்வே வாரியத்தில் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள்.. எழுத்து தேர்வு ஏதுமின்றி நியமனம்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

By Thanalakshmi V  |  First Published Jun 27, 2022, 5:46 PM IST

மேற்கு ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள 3,612 தொழிற் பழகுனர்கள் பணியிடங்கள் எந்தவித தேர்வுமின்றி, ஆர்வம் மற்றும் தகுதியின் அடிப்படையிக்ல் பணியமர்த்தபடவுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முனை நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக, எலக்ட்ரீஷியன், வெல்டர் உள்ளிட்ட 18 தொழிற்பணிகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டது.
 


மேற்கு ரயில்வே வாரியத்தில் காலியாக உள்ள 3,612 தொழிற் பழகுனர்கள் பணியிடங்கள் எந்தவித தேர்வுமின்றி, ஆர்வம் மற்றும் தகுதியின் அடிப்படையிக்ல் பணியமர்த்தபடவுள்ளது. இதற்கான விண்ணப்ப செயல்முனை நாளையுடன் முடிவடைகிறது. முன்னதாக, எலக்ட்ரீஷியன், வெல்டர் உள்ளிட்ட 18 தொழிற்பணிகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டது.

மேலும் படிக்க:Bank Job : சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி வாய்ப்பு! - விண்ணப்பிக்க இன்றே கடைசி!

Tap to resize

Latest Videos

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தொழிற் பழகுனர்களுக்கான 3,612 காலி பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் ஏதும் நடத்தபடாது என்பதால் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர்கள் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:மாதம் ரூ. 2.40 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்புகள்... எங்க தெரியுமா?

இந்த காலி பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பயிற்சி காலம் ஓராண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 15 வயது தாண்டியவர்களாகவும் 21 வயது பூர்த்தியடையாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் படிக்க:மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 திட்டம்... ஊக்கத் தொகை பெறும் மாணவர்கள் பட்டியல் வெளியீடு..!

தற்போது நடைபெறும் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் என்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ST மற்றும் SC பிரிவினருக்காக 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!