மத்திய அரசின் கீழ் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணி இடங்களில் சேர தகுதி உடயைவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலி பணி இடங்கள்: 35
பணி: துணை பொது மேலாளர் (நிதி) - 08
சம்பளம்: மாதம் ரூ. 1 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரை
பணி: மூத்த மேலாளர் (நிதி) - 10
பணி: மூத்த மேலாளர் (நிதி) - 15
சம்பளம்: மாதம் ரூ. 90 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் வரை
பணி: மூத்த மேலாளர் (நிதி) - 02
சம்பளம்: மாதம் ரூ. 60 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ. அல்லது எம்.பி.ஏ. (நிதி) முடித்திருக்க வேண்டும். பணி சம்பந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வயது வரம்பு: 01.06.2022 தேதியின் படி வயது கணக்கிடப்படும். பணி வாரியாக வயது வரம்பு மாறுபடுவதை அறிவிப்பில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: பணி: www.nlcindia.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ. 854. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 354 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-07-2022
இது பற்றிய கூடுதல் விவரங்களை https://www.nlcindia.in/new_website/careers/advt/Detailed%20Advt.16.06.2022%20Final.pdf வலைதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.