BSF Recruitment 2022 : எல்லை பாதுகாப்பு படையில் சேர அழைப்பு! - 110 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

By Dinesh TG  |  First Published Jun 21, 2022, 8:19 PM IST

BSF - எல்லை பாதுகாப்பு படையில் குருப் பி மற்றும் சி பிரிவில் எஸ்.ஐ., மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான 110 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு படையில் சேர விரும்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 


BSF - எல்லை பாதுகாப்பு படையில் குருப் பி மற்றும் சி பிரிவில் எஸ்.ஐ., மற்றும் கான்ஸ்டபிள் பணிக்கான 110 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எல்லை பாதுகாப்பு படையில் சேர விரும்பமுள்ள தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் அடுத்த மாதம் 12ம் தேதிக்குள் சரியான முறையில் இணையதள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட மேலும் பல தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பணி விபரம் ; எல்லை பாதுகாப்பு படை (BSF)
காலிப் பணியிடங்கள் ; 110
பணி பெயர் ; குருப் பி & சி (SI & Constable Posts)
விண்ணப்பிக்கும் தேதி ; 13 ஜூன் 2022
விண்ணப்பிக்க முடிவடையும் தேதி ; 12 ஜூலை 2022
பணியிடம் ; இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை ; ஆன்லைன்
இணையதளம் ; rectt.bsf.gov.in

காலிப் பணியிடங்கள்

SI - 22 காலிப் பணியிடங்கள்
Constable - 88 காலிப் பணியிடங்கள்
மொத்தம் - 110 பணியிடங்கள்

கல்வித் தகுதி

SI - பணிக்கு குறைந்த பட்சம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங், அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது ஆட்டோ எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

Constable - பணிக்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

SI - 30 வயது
Constable - 18 முதல் 25 வயது வரை

தேர்வு முறை

எழுத்து தேர்வு
உடல் திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு
ஆவணம் சரிபார்த்தல்
செயல்முறை தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை
மறு மருத்துவ பரிசோதனை

சம்பளம் வரைமுறை

SI - ரூ.35,000/- முதல் ரூ.1,12,400/-
Constable - ரூ.21,700/- முதல் ரூ.69,000/-வரை

கட்டண விபரம்
பொது/OBC/EWS (SI) - ரூ.200/-
பொது/OBC/EWS (Constable) - ரூ.100/-
SC/ST/ESM - கட்டணமில்லை

எல்லை பாதுகாப்பு படை இணையதளத்தில் சென்று முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.

click me!