AIIMS Madurai Recruitment 2022 : மதுரை எய்ம்ஸ் மருத்துவமணையில் பணிவாய்ப்பு! - 94 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

By Dinesh TG  |  First Published Jun 21, 2022, 5:18 PM IST

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்ற பல பணிகளுக்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
 


எய்ம்ஸ் மருத்துவமனையை தென் மாநிலங்களை அமைக்கும் முயற்சியாக மதுரை அருகே அமைப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணியாற்ற மருத்துவ பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட மற்றும் பல பணிகளுக்கான அறிவிப்பாணையை மத்திய, மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

பணி வாரியம் : எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை

பதவிகள் : மருத்துவ பேராசிரியர், உதவிப் பேராசிரியர், மற்றும் பல பதவிகள்

மொத்த காலிப் பணியிடங்கள் ; 94

தொடங்கும் தேதி ; 11 ஜூன் 2022

முடிவடையும் தேதி ; 18 ஜூலை 2022

விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்

பணிப் பிரிவு ; மத்திய அரசுப் பணி

பணி இடம் ; மதுரை

AIIMS Official Website ; jipmer.edu.in

பணி விபரம்

மருத்துவ பேராசிரியர் ; 20 காலிப் பணியிடங்கள்
கூடுதல் பேராசிரியர் ; 17
இணை பேராசிரியர் ; 20
உதவி பேராசிரியர் ; 37

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பலகலைக்கழகத்தில், துறை சார்ந்த பிரிவில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் தளர்வு

50 வயது முதல் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 வயது வரையும், OBC பிரிவினருக்கு 3 வயது வரையும், PwBD பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தேர்வு முறை

ஆன்லைன் தேர்வு
நேர்முகத் தேர்வு
மற்ற விபரங்களுக்கு தேர்வு நோட்டிஃபிகேஷனை பார்க்கவும்.

கட்டண விபரம்

பொது மற்றும் OBC பிரிவினருக்கு ; ரூ.1500/-
SC/ST/EWS/PWD பிரிவினருக்கு ; ரூ.1200/-

சம்பள விபரம்

குறைந்த பட்சம் ரூ.1,01,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,400/-

விண்ணப்பிக்கும் முறை

அங்கீகரிக்கப்பட்ட எய்ம்ஸ் மதுரை மருத்துவமணை இணையதளத்திற்கு செல்லவும். aiimsexams.ac.in

Recruitments பகுதியை தேர்வு செய்து உள்நுழையவும். அங்கிருக்கும் Faculty Recruitment 2022 for AIIMS Madurai (Notice No:- JIP/Admn.4/AIIMS-MDU/Fac./2022) நோட்டிஃபிகேஷன் கிளிக் செய்து விண்ணபப்படிவத்தை பூர்த்தி செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

click me!