டிகிரி மட்டும் போதும்.. தமிழக விமான நிலையங்களில் அருமையான வேலைவாய்ப்பு - முழு தகவல்கள் !

தமிழக விமான நிலையங்களில் இளநிலை உதவியாளர் வேலை அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.


நிறுவன பெயர் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை : 156 

Latest Videos

பணியிடம் : தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்

தொடக்க தேதி : 01.09.2022

கடைசி தேதி : 30.09.2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

பதவியின் பெயர் & காலியிடங்களின் எண்ணிக்கை:

132 - இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை) NE-4 

10 - இளநிலை உதவியாளர் (அலுவலகம்) NE-4 

13 - மூத்த உதவியாளர் (கணக்குகள்) NE-6 

01 - மூத்த உதவியாளர் (அதிகாரப்பூர்வ மொழி) NE-6 பதவிகள்

விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றை நன்கு தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Graduate, Diploma, B.Com, Masters in Hindi முடித்திருக்க வேண்டும்

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு


வயது வரம்பு 

*25/08/2022 அன்று 18 முதல் 30 ஆண்டுகள்

*25/08/2022 தேதியின்படி OBCக்கு அதிகபட்ச வயது *வரம்பு பின்வருமாறு 3 ஆண்டுகள் தளர்த்தப்படுகிறது.

*25/08/2022 அன்று எஸ்சி/எஸ்டிக்கு 5 ஆண்டுகள்.

*வயது, தகுதி, அனுபவம் போன்றவை, 25/08/2022 அன்று கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

*SC/ST/பெண்- ரூ.81/-

*UR, OBC- ரூ.1000/-

இந்த பணி குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, அதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..38,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !

click me!