இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6.6 சதவீதமாக உலக வங்கி உயர்த்தியுள்ளது
2025 - 2027ஆம் நிதியாண்டுக்கு இடையே இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள உலக வங்கி, உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது. உலகளாவிய பொருளாதார வாய்ப்புகளுக்கான ஜூன் மாத அறிக்கையில், இந்தியாவில் ஆண்டுக்கு 6.7 சதவீதம் என்ற வீதத்தில் நிலையான சராசரி வளார்ச்சி இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் அதன் கணிப்புடன் ஒப்பிடும் போது, 2025ஆம் நிதியாண்டில் 6.6 சதவீதம், 2026ஆம் நிதியாண்டில் 6.7 சதவீதம் என இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பை தலா 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த வாரம் இந்திய ரிசர்வ் வங்கியால் கணிக்கப்பட்ட 7.2 சதவீதத்துக்கும் இது குறைவானதாகும்.
undefined
இந்தியாவில், 2023-24இல் வளர்ச்சி 8.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜனவரியில் உலக வங்கி மதிப்பிட்டதை விட 1.9 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவின் பொருளாதாரம் வலுவான உள்நாட்டுத் தேவையாலும், முதலீடுகளின் எழுச்சி மற்றும் வலுவான சேவை நடவடிக்கைகளாலும் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஜி.டிபி., வலுவான வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது. முதலீட்டு வளர்ச்சியானது முன்னர் எதிர்பார்த்ததை விட வலுவாக இருக்கும் என்றும், வலுவான பொது முதலீடுகள் தனியார் முதலீட்டுடன் இருக்கும் என்றும் உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
DA hike : வங்கி ஊழியர்களுக்கு மளமளவென அதிகரிக்கும் அகவிலைப்படி.. மே, ஜூன், ஜூலை மாதங்களில் எவ்வளவு?
விவசாய உற்பத்தியின் மீட்சி மற்றும் பணவீக்கம் குறைவதால் தனியார் நுகர்வு வளர்ச்சி பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது தற்போதைய செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, அரசாங்க நுகர்வு மெதுவாகவே வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், உலக வங்கியின் அறிக்கையில், உலகளாவிய வளர்ச்சி இந்த ஆண்டு 2.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளில் முதன்முறையாக புவிசார் அரசியல் பதற்றங்கள், அதிக வட்டி விகிதங்கள் இருந்தபோதிலும் உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பணவீக்கம் மிதமானதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.