Work from home:ஆபிஸ் வராதிங்க: 90% ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதியளித்த நிறுவனம் பற்றி தெரியுமா

By Pothy RajFirst Published May 16, 2022, 3:55 PM IST
Highlights

Work from home  :கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வேலைபார்க்க கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், 90 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்று இந்திய நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, பல நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வேலைபார்க்க கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், 90 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்று இந்திய நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு அனுமதியளித்துள்ளது.

சமீபத்தில் ஜூனியர்ஹட் எனும் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரையும் அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்ற ஒரு மாதம் அவகாசம் அளித்தது. ஆனால், அலுவலகத்துக்கு நேரில் வந்து பணியாற்ற எதிர்ப்புத் தெரிவித்த ஊழியர்களில் 800 பேர் வேலையை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் இந்த நிறுவனம் 90% ஊழியர்களுக்கு வீட்டியிலிருந்து பணிபுரிய அனுமதியளி்த்துள்ளது

பெங்களூரைச் சேர்ந்த ஜெரோதா என்ற ப்ரோகேஜ் நிறுவனத்தில் 1100 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள், இதில் 950 ஊழியர்களை நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற நிறுவனம் உத்தரவிட்டுள்ளது

ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ நதின் காமத் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியி்ல் கூறுகையில் “  எங்கள் நிறுவனத்தில் உள்ள 1100 ஊழியர்களில் 950 பேரை நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளோம்.சிறிய நகரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் குடும்பத்தாருடன் அனுபவித்து வேலையைச் செய்ய நாங்கள் அளிக்கும் வாய்ப்பு. பெலகாவியில் ஏராளமான ஊழியர்கள் இருக்கிறார்கள், ஏராளமான ஊழியர்கள் அங்கிருக்கிறார்கள். பெங்களூ வந்து பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறு உற்சாகத்துடன் பணியாற்றுகிறார்கள். 

கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து ஏராளமான நிறுவனங்கள் அலுவலகத்தையே மூடிவிட்டன, ஆன்-லைன் மூலம் அலுவலகத்தை நடத்தி வருகின்றன. ஊழியர்களின் வசதிக்காக கர்நாடகாவில் உள்ள சிறிய நகரங்களில் சாட்டிலைட் அலுவகங்களையும் அமைத்திருக்கிறோம்.  எங்கள் ஊழியர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள், தொடர்ந்து வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்.

பெகாவி நகரில் ஏராளமான ஊழியர்கள் இருப்பதால் அங்கு ஒரு அலுவலகமும் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்
மற்றொருபுறம்,மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளன. டிசிஎஸ் நிறுவனம் 25X25 என்ற மாடலிலும், இன்போசிஸ், காக்னிசன்ட், ஹெச்சிஎல் டெக் ஆகியவை தங்கள் அலுவலகத்தை ஹைபிரிட் மாடலில் மாற்றவும் திட்டமிட்டுள்ளன.

click me!