மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்தும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மையத்தின் கடந்த ஒன்பது ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படையில் இந்தியா எவ்வளவு தூரம் பயணித்துள்ளது என்பது குறித்த விளக்கத்தை அளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், AI ஐ ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உள்ளடக்கிய டிஜிட்டல் இந்தியா மசோதாவில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக கூறினார்.
"டிஜிட்டல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க AI ஐ ஒழுங்குபடுத்துவோம்" என்று சந்திரசேகர் கூறினார். தொடர்ந்து கூறிய அவர், "AI நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம், தீங்கு விளைவிப்பதற்காக அல்ல. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் அதிக அளவில் வேலைவாய்ப்பு பறிபோகும் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு தெரியவில்லை.
இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!
செயற்கை நுண்ணறிவு என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கக் கூடியது. காரண காரியங்கள் அறிந்தோ, பகுத்தறிவுடனோ அது செயல்படவில்லை. மனிதர்களின் வேலையை செயற்கை நுண்ணறிவு பறித்துவிடாது. காரணங்களும் பகுத்தறியும் தன்மையும் பணிகளுக்கு அடிப்படை ஆகும். அத்தகைய மேம்பட்ட தன்மையுடன் தற்போதைய செயற்கை நுண்ணறிவு இல்லை.
செயற்கை நுண்ணறிவு, வெப் 3 போன்ற தொழில்நுட்பங்கள் டிஜிட்டல் குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஒழுங்குமுறைகளை அரசு ஏற்படுத்தும். 85 கோடி இந்தியர்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இது 2025 ஆம் ஆண்டுக்குள் 120 கோடியாக உயரும். செயற்கை நுண்ணறிவு தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது.
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க, மனிதர்களின் குறுக்கீடுகளைக் குறைக்க பல நாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே அது குறித்து பயப்பட தேவையில்லை என்று கூறினார். ஓபன்ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இந்தியப் பயணத்தின் போது சந்தித்த பிறகு, AI இன் ஒழுங்குமுறை பற்றிய அவரது கருத்துக்கள் வெளிவந்துள்ளது.
ஓபன்ஏஐயின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனின் ஆலோசனைக்கு பதிலளிக்கும் விதமாக சந்திரசேகர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். AI ஐ ஒழுங்குபடுத்துவதற்கு ஒரு உலகளாவிய அமைப்பு இருக்க வேண்டும். AI நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதையும், தீங்கு விளைவிப்பதற்காக அல்ல என்பதையும் உறுதிப்படுத்த இது அவசியம் என்று ஆல்ட்மேன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..108 எம்பி கேமரா..கொரில்லா கிளாஸ் - சாம்சங் Galaxy F54 5G எப்படி இருக்கு?