ஒரு பக்கம் முரட்டுக் குத்து மறுபக்கம் கைகுலுக்கல்: சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி ஏன் அதிகரிக்கிறது?

Published : Feb 08, 2022, 04:54 PM IST
ஒரு பக்கம் முரட்டுக் குத்து மறுபக்கம் கைகுலுக்கல்: சீனாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி ஏன் அதிகரிக்கிறது?

சுருக்கம்

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் சம்பவம், சீன செயலிகளுக்குத் தடை, சீன நிறுவனங்களின் வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து , அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீன அத்துமீறலால் மோதல் என இந்தியா, சீனா இடையே உரசல்கள், புகைச்சல்கள் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது, மோதல் போக்குதான் நீடித்து வருகிறது

“இது வேறவாய், அது நாறவாய்” என்று வடிவேலு ஒருபடத்தில் கூறுவார். அதுபோல, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் சம்பவம், சீன செயலிகளுக்குத் தடை, சீன நிறுவனங்களின் வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்து , அருணாச்சலப்பிரதேச எல்லையில் சீன அத்துமீறலால் மோதல் என இந்தியா, சீனா இடையே உரசல்கள், புகைச்சல்கள் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது, மோதல் போக்குதான் நீடித்து வருகிறது. 

அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், அதற்கும் வர்த்தகத்துக்கும் என்ன சம்பந்தம் என்ற ரீதியில்,  சீனாவிலிருந்து இறக்குமதியை மட்டும் இந்தியர்கள் குறைக்கவில்லை என்பது மத்திய அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை முயன்றும் முடியவில்லை. கடந்த 2014ம் ஆண்டிலிருந்து 2021ம் ஆண்டுவரை சீனாவிலிருந்து இந்திய இறக்குமதி 8% வளர்ந்திருக்கிறது. அதிலும் கடந்த 2021ம் ஆண்டு அதிகமாக இறக்குமதியாகியுள்ளதாக கடந்த மத்திய அரசு வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

அருணாச்சலப்பிரதேச எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையிலான மோதல் முடிந்து இயல்புநிலைக்கு வந்தாலும், வர்த்தகத்தில் முதலீடு தொடர்பான விஷயத்தில் மட்டும் இரு நாடுகளுக்கு இடையே தீர்வு எட்டப்படவில்லை.

2021ம் ஆண்டு சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரி்க்க காரணமென்ன

கடந்த 2021ம் ஆண்டு சீனாவிலிருந்து 12,560 கோடி டாலருக்கு இறக்குமதி செய்துள்ளதாக சீன சுங்கவரித்துறை அமைச்சகம் கடந்த மாதம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. முதல்முறையாக சீனாவிலிருந்து இந்திய இறக்குமதி 10,000 டாலர்களைக் கடந்துள்ளது.ஆனால், இந்தியாவின் ஏற்றுமதி வெறும் 2,810 கோடிக்கு மட்டுமே இருக்கிறது. 

2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டு சீனாவுடனான இந்திய வர்த்தகம் குறைந்திருந்தது. ஏனென்றால், கொரோனா வைரஸ் பரவல் அச்சம், எல்லையில் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் போன்ற காரணங்களால் வர்த்தகம் குறைந்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து படிப்படியாக 30சதவீதம் அதிகரித்தது. ஏற்றுமதி 56% அதிகரித்தாலும், இந்தியா, சீனா இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை குறையவில்லை, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 22 % அதிகரி்த்துள்ளது. 

இறக்குமதி அதிகரிக்கக் காரணமென்ன

சீனாவிலிருந்து இறக்குமதி அதிகரிப்பில்  பிரதானமாக இருப்பது மின்னணு மற்றும் எந்திரங்களும், ரசாயனங்களும்தான். இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் இறக்குமதி, மருந்து நிறுவனங்களுக்கான மூலப்பொருள், ஆட்டமொபைல் நிறுவனங்களுக்கான பொருட்கள்தான் 2021ம் ஆண்டு இறக்குமதி அதிகரிக்கக் காரணமாக இருந்தன என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

100 வகையான பொருட்கள் இறக்குமதி செய்ததன் மதிப்பு கடந்த ஆண்டு 1600 கோடி டாலராகி, 4,500 டாலராக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் பணிமுடிக்கப்பட்ட பொருட்கள் இற்ககுமதிதான் அதாவது சர்க்கியூட்கள் இறக்குமதி 147% உயர்ந்தது, லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதி 77%அதிகரிப்பு, ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர், ரசாயனங்கள் இறக்குமதி போன்றவை அதிகரித்துள்ளன

இந்தியாவின் ஏற்றுமதி நிலவரம் எப்படி

இந்தியாவைப் பொருத்தவரை சீனாவிலிருந்து பணிமுடிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதியைக் குறைப்பது போன்று தெரியவில்லை. இது கவலைக்குரிய விஷயம்தான். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி இருந்தாலும், அது பெரிதாக வளர்ச்சிக்குரியதாக இல்லை. கடந்த இரு ஆண்டுகளில்தான் 50 சதவீதம் வளர்ச்சி ஏற்றுமதியில் இருக்கிறது. 

குறிப்பாக கச்சா பொருட்களான பருத்தி, கடல் உணவுகள் இந்திய ஏற்றுமதியில் முக்கியமானவை. இதில் சீனாவிலிருந்து பணிமுடிக்கப்பட்ட பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவிட்டு, கச்சா பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதன் காரணமாகத்தான் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கிறது. எப்போது கச்சா பொருட்களுக்கான மதிப்பு, பணிமுடிக்கப்பட்ட பொருட்களைவிட மதிப்பு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 
2017ம் ஆண்டு சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 51,800 கோடி டாலராக இருந்த நிலையில் 2021ம் ஆண்டு 69,400 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா-சீனா உறவில் ஏற்பட்ட தாக்கம்

சீனாவுடனான வர்த்தகம் இந்தியாவுக்கு அதிகரித்துவந்தாலும், பொருளாதார ரீதியான உறவுகள் கடந்த 2 ஆண்டுகளாக மாறிவிட்டன. குறிப்பாக 2020ம் ஆண்டு கல்வான் எல்லையில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரிதாக உறவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்,வர்த்தகம் செய்ய முடியாது என்பதை மத்திய அரசு சீசகமாகச் சுட்டிக்காட்டியது. 

சீனாவிலிருந்து வரும் முதலீடு கடந்த ஆண்டு கட்டுப்பாடுகளால் குறைந்தது, குறிப்பாக தொழில்நுட்பம், தொலைத்தொடர்பில் சீனா நிறுவனங்களின் முதலீடு வேகமாக அதிகரித்த நிலையில் குறைந்தது. 

குறிப்பாக அலிபாபா, டென்சென்ட் நிறுவனங்கள் முதலீட்டைக் குறைத்துவிட்டன. 200 சீன செயலிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்தியாவில் செயல்பட்டு வரும் சீன நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை மத்தியஅ ரசு இறுக்கியது. சமீபத்தில் எம்ஐ நிறுவனத்துக்குச் சென்று வருமான வரித் துறையினர் ஆய்வு நடத்தினர். 

மத்திய அரசின் இந்த செய்பாடு சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சீன வர்த்தகஅமைச்சகம் தரப்பில் “ நியாயமான, வெளிப்படைத்தன்மை நிறைந்த, பாரபட்சமற்ற சூழலை சீன நிறுவனங்களுக்கு, வர்த்தகத்துக்கு இந்தியா ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று வலியுறுத்தியது.

ஆதலால், எதிர்காலத்தில் இந்தியா, சீனா இடையிலான வர்த்தக உறவுகள் பெரிதாக மாற வாய்ப்பில்லை.  எதிர்காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதியை குறைத்தால், சீனாவை சார்ந்திருப்பதிலிருந்து இந்தியா தப்பிக்கும். அதுவரை இந்திய நிறுவனங்களுக்குத் தேவையான முக்கியமான பொருட்கள் அனைத்தும் சீனாவிலிருந்துதான் வர வேண்டும். சீனாவைச் சாராமல் உள்நாட்டிலேயே பொருட்களை உற்பத்தி செய்யும்போதுதான் நாம் சீனாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்க முடியும்.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்