WPI inflation:பிப்ரவரி மொத்தவிலைப் பணவீக்கம் 13 சதவீதத்துக்கும் மேல் அதிகரி்ப்பு

Published : Mar 14, 2022, 02:40 PM ISTUpdated : Mar 14, 2022, 02:41 PM IST
WPI inflation:பிப்ரவரி   மொத்தவிலைப் பணவீக்கம் 13 சதவீதத்துக்கும் மேல் அதிகரி்ப்பு

சுருக்கம்

WPI inflation:நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 11-வது மாதமாக 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து பிப்ரவரியில் 13.11% மாக உயர்ந்துள்ளது.

நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 11-வது மாதமாக 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து பிப்ரவரியில் 13.11% மாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு

இது கடந்த ஜனவரி மாதத்தில் 12.96சதவீதமாக இருந்தநிலையில் அதைவிட சற்று பிப்ரவரியில் அதிகரி்த்துள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பரில் மொத்தவிலைப் பணவீக்கம் 14.27% என்று இருந்தநிலையில்அது திருத்தப்பட்டு 13.56% என மாற்றப்பட்டது.

மொத்தவிலைப் பணவீக்கம் என்றால் என்ன( WPI inflation )
மொத்தவிலைப் பணவீக்கம் என்பது பொருட்கள், சேவைகள் சில்லரைவிலையில் நுகர்வோரைச் சென்றடையும் முன்பு ஒரு மாதத்துக்கும், மற்றொரு மாதத்துக்கும் இடையே நடக்கும் விலை மாற்றம். அதாவது பொருட்கள் மொத்தமாக விற்கப்படும்போது விலையில் ஏற்படும் மாற்றமாகும். இந்த விலையில் ஏற்படும் மாறறத்தை வைத்துதான் ஒருநாட்டின் பணவீக்க அளவு தீர்மானிக்கப்படும். 

இந்தியாவில் பணவீக்கம் கணக்கிடுவது மொத்தவிலைப் பணவீக்கத்தின் அடிப்படையில் இல்லாமல் சில்லரை விலைப் பணவீக்கத்தின் அடிப்படையில்தான் கணக்கிடப்படுகிறது.

உற்பத்தி 

2021, பிப்ரவரியில் மொத்தவிலைப் பணவீக்கம் 4.83சதவீதமாக இருந்தது. பிப்ரவரியில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பணவீக்கம் 31.5%, ஜனவரியில் 32.3% என இருந்தது. உற்பத்திப் பொருட்களின் பணவீக்கம் 9.42சதவீதத்திலிருந்து 9.84ஆக அதிரித்துள்ளது.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் என்பது 9.19 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஜனவரியில் 10.33% எனக் குறைந்திருந்தது. இதன் மூலம் பணவீக்கம் படிப்படியாக அதிகரித்துவருவது தெரிகிறது. காய்கறிகளுக்கான பணவீக்கம் ஜனவரியில் 38.45 சதவீதமாக இருந்தநிலையில், பிப்ரவரியில் 26.93சதவீதமாகக் குறைந்துள்ளது.

காரணம் என்ன

இதுகுறித்துமத்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “தாது எண்ணெய், உலோகம் விலை, ரசாயனம் மற்றும் அதுசார்ந்த பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள்,  உணவுசாரா பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால்தான் பிப்ரவரியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் பிப்ரவரியில் பணவீக்கம் சற்று அதிகம்தான்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் பணவீக்கம் பிப்ரவரி மாதத்தில் 9.84% இருக்கிறது, இது ஜனவரியில் 9.42சதவீதமாகக் குறைந்திருந்தது. எரிபொருள் மின்சாரத்தைப் பொருத்தவரை 31.50 சதவீதமாக இருக்கிறது. 

கச்சா  எண்ணெய் விலை

ஜனவரி மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 39.41சதவீதம் உயர்ந்தநிலையில், இது பிப்ரவரி மாதத்தில் 55.17 சதவீதமாகஅதிகரித்தது. இருப்பினும் கடந்த 4 மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லரை விலை பணவீக்கம்

நாட்டின் பணவீக்கத்தை அளவிட மொத்தவிலைப் பணவீக்கும் எடுக்கப்படுவதில்லை. சில்லரை விலைப் பணவீக்கம் புள்ளிவிவரங்கள் மட்டுமே கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் ரிசர்வ் வங்கியின் உச்ச அளவான 6%க்குள் பணவீக்கம் இருப்பதால், கடந்த 2020ம் ஆண்டுவரை கடனுக்கான வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தவில்லை. ஆனால், சில்லரை விலைப் பணவீக்கம் விவரங்கள் வெளியானபின்புதான் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை உயர்த்துமா என்பது தெரியவரும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!