gold import: அதிகரிக்கும் தேவை! நடப்பு நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 73% அதிகரிப்பு

By Pothy RajFirst Published Mar 14, 2022, 1:50 PM IST
Highlights

gold import:  இந்தியாவில் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில் 73% அதிகரித்து, 4510 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் தங்கம் இறக்குமதி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையில் 73% அதிகரித்து, 4510 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன

தங்கத்தை அதிகமாக வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வதால், மத்திய அரசுக்கு நடப்புக் கணக்குப்பற்றாக்குறை நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

இறக்குமதி அதிகரிப்பு

இது கடந்த 2021 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை இறக்குமதி 2611 கோடி டாலராகத்தான் இருந்தது. 2022 பிப்ரவரி மாதத்தில் தங்கம் இறக்குமதி 11.45% குறைந்து, 470 கோடியாகக் குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.

கடந்த11 மாதங்களில் தங்கம் இறக்குமதி காரணமாக, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 17600 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021, ஏப்ரல் முதல் பிப்ரவரி காலத்தில் இது 8900 கோடி டாலராகத்தான் இருந்தது. 

2-வது இடம்

சீனாவுக்கு அடுத்தார்போல் தங்கம்இறக்குமதியில் 2-வது பெரிய நாடு இந்தியா. நகைத் தொழில் தேவைக்காகவே பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதியாகிறு. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து நகைகள் ஏற்றுமதி 57.5 சதவீதம் உயர்ந்து, 3525 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருப்பதால் நாட்டின் நடப்புக் கணக்குப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. செப்டம்பர் காலாண்டுவரை 1.3%அதிகரித்து, 9600 கோடி டாலராக அதிகரி்த்துள்ளது.

குறைவு

நகைகள் மற்றும் கற்கள் ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் கோலின் ஷா கூறுகையில் “ நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை மாதந்தோறும் சராசரியாக 76.57 டன் தங்க நகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். இது வழக்கமான நிலைமையைவிட குறைவுதான்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை 842.28 டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில்  இதே காலக்கட்டத்தில் 690முதல் 890 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது” எனத் தெரிவித்தார்

click me!