wheat stocks in india: india wheat export ban: 2016ம் ஆண்டுக்குப்பின் கோதுமை கையிருப்பு குறைவதற்கு வாய்ப்பு?

By Pothy RajFirst Published May 17, 2022, 9:58 AM IST
Highlights

wheat stocks in india: india wheat export ban:2016ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவின் கோதுமை கையிருப்பு 2022ம் ஆண்டில் குறைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் 2-வது குறைந்த கையிருப்பை எட்டும் எனத் தெரிகிறது.

2016ம் ஆண்டுக்குப்பின் இந்தியாவின் கோதுமை கையிருப்பு 2022ம் ஆண்டில் குறைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 13 ஆண்டுகளில் 2-வது குறைந்த கையிருப்பை எட்டும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 15 ஆண்டுகளில் மத்திய அரசு சார்பில் தானியங்கள் கொள்முதல் அளவும் குறைவாக இருக்கும் என்று ஆங்கில நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கியது, விலைவாசியைக் குறைக்க வெளிச்சந்தையில் கோதுமையை விற்பனை செய்தது போன்றவை 38 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கோதுமை விலை உயர்வு, உணவுப்பணவீக்கம், விளைச்சல் குறையும் என்ற கணிப்பு, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றால்தான் கோதுமையை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த 13ம் தேதி திடீரென்று தடை செய்தது.

ஆனால், மத்திய உணவுத்துறை அமைச்சகம் கூறுகையில் “ பொதுவழங்கல் பிரிவுக்குக்குத் தேவையாந உணவு தானியங்கள் போதுமான அளவில் கையிருப்பு  இருக்கிறது. ஆதலால், கவலை வேண்டாம். ஆனால், கடும் வெயில் காரணமாக கோதுமை விளைச்சல் குறையும், அதிகமான ஏற்றுமதி காரணமாகத்தான் தேவைக்கும் சப்ளைக்கும் இடையிலான சமநிலையற்ற தன்மை உருவானது” எனத் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பணவீகக்ம் எப்போதும் இல்லாத வகையில் 7.79 சதவீதம் அதிகரித்தது, உணவுப் பணவீக்கம் 8.38 சதவீதம் உயர்ந்தது, பருப்பு வகைகளுக்கான பணவீகக்ம் 6% வரை உயர்ந்தது போன்றவையால்தான் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

2022-23ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் கோதுமை விளைச்சல் 111.30 மில்லியன் டன் இருக்கும் என்ரு கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது. இது கடந்த ஆண்டு 109 மில்லியன் டன்னாகத்தான் இருந்தது.

ஆனால் பல மாநிலங்களில் நிலவும் கடும் வெயிலி் காரணமாக கோதுமை விளைச்சலை 5.7சதவீதம் குறைத்து 105 மில்லியன் டன்னாகக் குறையும் என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மத்திய அரசும் குறைந்த அளவில்தான் கோதுமையைக் கொள்முதல் செய்யும். 44 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்ய இலக்கு வைத்துள்ளநிலையில், 19.50 மில்லியன்டன் கோதுமைதான் கொள்முதல் செய்யும் எனத் தெரிகிறது

உணவுச் செயலாளர் சுபான்ஷு பாண்டே கூறுகையில் “ நாட்டின் நிதியாண்டில் கோதுமை கையிருப்பு 19 மில்லியன் டன்னாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டில் 27.30 மில்லியன் டன்னாகஇருந்தது. கடந்த ஆண்டு இருந்த மொத்த கையிருப்பான 70.60 மில்லியன் டன்னுக்கு கணக்கிட்டால், இந்த ஆண்டு நமது கையிருப்பு 37.50 டன்னாகத்தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்

வேளாண் வல்லுநர் ராமன் தீப் மான் கூறுகையில்”  பல்வேறு நலத்திட்டங்களுக்கும் தேவையான உணவுதானியங்களை சேமித்து வழங்குவது கடினமான செயல். நாட்டின் கடும் வெயில் காரணமாக கோதுமை விளைச்சல் குறையும் என்று அறிந்தபின்புதான் ஏற்றுமதி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்

பொதுவினியோகத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு 26மில்லியன் டன் உணவுதானியங்கள் தேவை. பிரதான் மந்திரி கரீப் கல்யான் அன்ன யோஜனா, கோவிட் நிவாரண இலவச உணவுத் திட்டம் வரும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதற்கு 10மில்லியன் டன் தேவை.

2020-21ம் ஆண்டில் கூடுதலாக 10.30 மில்லியன் டன் தானியங்களையும், 2021-22ம் ஆண்டில் 19.90 மில்லியன் டன் உணவு தானியங்களையும் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப்கல்யான் யோஜனா திட்டத்தில் வழங்கியுள்ளது.  இதனால் கடந்த ஆண்டு மட்டும் 50மில்லியன் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளது

இது தவிர ஓபன் மார்க்கெட் ஆப்ரேஷன் அதாவது வெளிச்சந்தை நடவடிக்கை மூலம் விலைவாசியைக் குறைக்க அரசு 7.10மில்லியன் டன் தானியங்களை விற்பனை செய்துள்ளது.

கோதுமை கையிருப்பு குறைந்து வந்ததைத் தொடர்ந்து பிரதான் மந்திரி கரீப்கல்யான் யோஜனா திட்டத்தில் கோதுமைக்குப் பதிலாக 5.50 மில்லியன் டன் அரிசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி 2022 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை10.90 மில்லியன் கோதுமை வழங்கவேண்டிய நிலையில் அதில் 5.40 மில்லியன் டன் அரிசி வழங்கப்படும் என அரசு அறிவித்தது
 

click me!