ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கம் பெற்றால் சிக்குவீர்கள்!!

Published : Dec 17, 2024, 01:33 PM IST
ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக ரொக்கம் பெற்றால் சிக்குவீர்கள்!!

சுருக்கம்

பிரிவு 269ST-ன் படி, ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகப் பெறுவது சட்டவிரோதம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு இந்த வரம்பு பொருந்தாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்.

வங்கி நடைமுறைகள், செயல்பாடுகள் அனைத்தும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடும். டெபாசிட், பணம் எடுத்தல் போன்றவையும் மாறுபடும். இதற்கு என்று சிறப்பு சட்டங்களும் உள்ளன. 

பிரிவு 269ST என்றால் என்ன?
ரொக்கப் பணம் செலுத்தும் வரம்பை நிர்ணயிக்கவும், டிஜிட்டல் பேமெண்ட்டுகளை அதிகரிக்கவும் இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிவு 269ST ஒரு பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  ஒரு நாளைக்கு ரொக்கப் பரிவர்த்தனை வரம்பு ரூ.2 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளதாக பிரிவு 269ST கூறுகிறது, எந்தவொரு நபரும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையைப் பெறக்கூடாது

ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து மொத்தமாக அல்லது ஒரு பரிவர்த்தனை என்று பிரிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து பணம் எடுப்பதற்கு இந்த வரம்பு பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. இந்தப் பிரிவில் பணம் வாங்குபவர்களுக்கு (Receivers) மட்டுமே பொருந்தும். அதாவது, பணத்தைப் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு நாளில் ஒரு நபரிடமிருந்து எவ்வளவு பெறலாம்?

ஒரே நபரிடமிருந்து 2 வெவ்வேறு பில்களில் பரிவர்த்தனை செய்யப்பட்டாலும், ஒரு நபர் 2 லட்சத்தை ரொக்கமாக பெற முடியாது. நீங்கள் ஒரு வர்த்தக நபர் என்று வைத்துக்கொள்வோம், இப்போது உங்களிடமிருந்து யாராவது 3 லட்சத்திற்கு பொருட்கள் வாங்கினால், நீங்கள் பெறுபவராக இருப்பதால் அபராதம் உங்களுக்குத்தான் விதிக்கப்படும். நீங்கள் தனிப்பட்ட பில்கள் போட்டாலும் பண வரவு ஒன்றாகத்தான் காட்டும்.  

மறுபுறம், இரண்டு வெவ்வேறு நபர்களிடமிருந்து தொகை பெறப்பட்டாலும், இருவரிடமிருந்தும் பெறப்பட்ட தொகை குறிப்பிட்ட வரம்பை விட குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. ஒருவரிடமிருந்து நீங்கள் ரூ. ஒரு நகைக்கு 1.75 லட்சம் மற்றும் மற்றொரு நபரிடம் இருந்து மற்ற பொருட்களுக்கு ரூ. 50,000 பெற்றால் அது மீறல் அல்ல.


ஒரு பரிவர்த்தனையில் ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக பெற்றால்: 

பொதுவாக காண்ட்ராக்டர்கள் குறிப்பிட்ட சதவீதம் பணியை முடித்துக் கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு பணம் கிடைக்கும். அவர்கள் பெறும் பணம் பெரும்பாலும் ரசீதாக இருக்கும்.  அவர்களுக்கு ஊதியம், பொருள் வாங்குவதற்கு, அன்றாட தேவைகள் என்று தொடர்ந்து பணத் தேவை இருக்கும்.  அவர்களால் ரூ. 2 லட்சத்துக்கு  மேல் பணத்தைப் பெற முடியாது. அனைத்து பரிவர்த்தனைகளும் செக் அல்லது வங்கிக்கு மின்னணு பரிமாற்றமாக இருக்கும். 

திருமண செலவு:

இந்திய திருமணங்கள் மற்றும் செலவிடப்படும் பணம் பற்றி அனைவருக்கும் தெரியும். இங்கு செலவிடப்படும் பணமும் இந்தப் பிரிவின் கீழ் வரும். விலக்கு அளிக்கப்பட்ட வருவாயின் ஒரு பகுதியாக இருக்கும் எந்தவொரு நிகழ்விலும் பெறப்பட்ட பணப் பரிசுகளும் இந்தப் பிரிவின் கீழ் வரும். 

பிரிவு 269ST பிரிவில்  அபராதங்கள்
பிரிவு 269ST -ன் கீழ், குறிப்பிடப்பட்டுள்ள விதியைப் பின்பற்றாமல், ஒரு நபரிடமிருந்து ஒரே நாளில் 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்திற்கான ரசீது பெறப்பட்து இருந்தால் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் அனைத்து தனிநபர்கள், வணிகங்கள், தொழில் வல்லுநர்கள், நிறுவனங்கள் என அனைத்துக்கும் பொருந்தும். 

வங்கிகளில் இருந்து பணத்தை எடுத்தால்:
சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் இரண்டிலும் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை காசோலை, பணம் எடுக்கும் சிலிப் (Withdrawal slip) அல்லது டெபிட் கார்டு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். பணம் எடுக்கும் வரம்பு வங்கிகளுக்கு இடையே மாறுபடும். பயன்படுத்தப்படும் வங்கி கார்டுகளைப் பொறுத்தது. இது  பொதுவாக  ஒரு நாளைக்கு ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை இருக்கும். 

பாரத ஸ்டேட் வங்கிபரிவர்த்தனை விவரங்கள்:
செக் புத்தகம்: பெரும்பாலான வங்கிகள் ஆறு மாதங்களுக்கு 60 செக் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே அனுமதிக்கிறது. 
நடப்புக் கணக்கில் வாரத்திற்கு (Current accounts) அதிகபட்சம் ரூ. 1,00,000 வரை எடுக்கலாம்.
சேமிப்புக் கணக்கில் (Savings accounts) வாரத்திற்கு ரூ. 24,000 வரை பணம் எடுக்கலாம்.

ஏடிஎம்மில் பணம் எடுத்தல்:
தினமும் ரூ. 10,000 பணம் எடுக்கலாம் 
சம்பள கணக்கு (Salary Account) வைத்திருப்பவர்களுக்கு எந்த வரம்பும் இல்லை.
எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் இருந்து இந்தக் கார்டைப் பயன்படுத்தி மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் செய்யலாம். அதன் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 20 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும்.

போஸ்ட் ஆபீஸ் அல்லது தபால் அலுவலக கணக்கு:
இந்திய தபால் துறையானது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குகளில் இருந்து தபால் அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்க உதவுகிறது. 
ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ. 25,000 எடுக்கலாம்.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 1 0,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலவச பரிவர்த்தனைகள்:
தபால் அலுவலகத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகள் வரை அனுமதிக்கப்படுவார்கள். பண பரிவர்த்தனைகள் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் உதாரணத்திற்கு ஸ்டேட்மென்ட் கேட்டால் அதுவும் இதில் அடங்கும். 
இலவச பரிவர்த்தனைகளுக்கு அப்பால், ஒரு பரிவர்த்தனைக்கும் ரூ. 20 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பிற வங்கி ஏடிஎம்கள்: 
எஸ்பிஐ இல்லாமல் பிற வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வரம்புகளை மீறும் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 20 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!