
கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணத்தை ஒழித்து, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க வேண்டும் என தான் உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு செல்லாது என மோடி அறிவித்தார். இருந்தபோதிலும் புதியதாக வெளிவந்துள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் போன்றே தற்போது சில கள்ள நோட்டுகள் வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
அதாவது, போலியான 500 ரூபாய் தாள் வெளிவந்துள்ளது. ₹500 நோட்டில் கவர்னரின் கையெழுத்துக்கு மேலே five underd என இருக்கும். ஆனால் Five hundred க்கு பதில் five undred என இருப்பதைக் போலியான நோட்டில் காண முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ள நோட்டு என சந்தேகம் இருப்பின், அப்பொழுதே காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பது நல்லது . இல்லையெனில் தலைவலி நமக்கே. எனவே பணத்தை கையாளும் போது சற்று கவனமாக இருப்பது நல்லது .
சமீபத்தில் கூட , டெல்லியில் உள்ள ஒரு ஏடிஎம்மிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தில் ‘பேங்க் ஆஃப் சில்ரன்’ என டைப் செய்த ரூபாய் தாள் வெளியானது . இது மக்களிடையே பெரிய சர்ச்சை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.