மியூச்சுவல் ஃபண்ட் துறையில் அதிரடி மாற்றம்.. எல்லாமே மாறப்போகுது - நிதியமைச்சர் சொன்ன குட் நியூஸ்

By Raghupati R  |  First Published Jul 29, 2023, 12:28 PM IST

மத்திய நிதி அமைச்சர் கார்ப்பரேட் பாண்ட் ரெப்போ ரேட் தளத்தை தொடங்கி வைத்தார். இது மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பெரிய படியாகும்.


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஏஎம்சி ரெப்போ கிளியரிங் லிமிடெட் (ஏஆர்சிஎல்) மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களுக்கான கார்ப்பரேட் டெப்ட் மார்க்கெட் டெவலப்மென்ட் ஃபண்ட் (சிடிஎம்டிஎஃப்) ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, நிதிச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி நிறுவனக் கடன் சந்தை மேம்பாட்டு நிதிக்கான (சிடிஎம்டிஎஃப்) விரிவான கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தியது.

இதனை நிதியமைச்சர் தனது முந்தைய வரவு செலவுத் திட்ட உரையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பத்திர கார்ப்பரேட் சந்தைக்கு இந்த தளம் மிகவும் முக்கியமானது ஆகும்.இந்நிகழ்ச்சியின் போது பேசிய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன்,”நாட்டின் மூலதனச் சந்தையானது பல வகையான வர்த்தகங்களுக்கு ஒரு ட்ரெண்ட்செட்டராக உருவெடுத்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

மூலதனச் சந்தைக்கான தீர்வுப் பணிகளை விரைவாக முடிக்க முடிகிறது என்றார். 2013 ஆம் ஆண்டில் 2 கோடியாக இருந்த நாட்டில் உள்ள சில்லறை டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 11.4 கோடியாக அதிகரித்துள்ளது. இது பங்குச் சந்தையைப் பொறுத்தவரையில் பெரிய அளவில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிதி கட்டுப்பாட்டாளர்கள் பல வகையான ஒழுங்குமுறைகளுக்கு அதிக வேலை மற்றும் பொறுப்பைக் கொண்டுள்ளனர். இறுக்கமான கட்டுப்பாடு மற்றும் முழுமையான கட்டுப்பாடு அவசியம். எனவே அனைத்து நிதிச் சந்தைகளுக்கும் தொழில்நுட்ப இயக்கப்பட்ட அமைப்பு பயன்படுத்தப்பட வேண்டும். தன்னம்பிக்கை இந்தியாவிற்கு, ஒழுங்குபடுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். இதன் மூலம் சாதகமான சூழலை உருவாக்க முடியும்.

Smt addresses the audience post the launch of the AMC Repo Clearing Limited and the Corporate Debt Market Development Fund for corporate bonds in Mumbai.

Also present on the occasion are Chairperson Smt Madhabi Puri Buch & Secretary… pic.twitter.com/VJVJpFnerh

— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc)

சந்தையின் ஸ்திரத்தன்மைக்கு நம்பிக்கை மிகவும் முக்கியமானது ஆகும். எனவே சந்தை, ஒழுங்குபடுத்துபவர், அரசாங்கம், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஒரு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். நாட்டில் இந்த திசையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று பேசினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!