Budget 2025: மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறள்!

Published : Feb 01, 2025, 01:03 PM ISTUpdated : Feb 01, 2025, 01:47 PM IST
Budget 2025: மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறள்!

சுருக்கம்

Union Budget 2025 quote Thirukkural: 2025-26 மத்திய பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" என்ற குறளின் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார்.

2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். செங்கோன்மை அதிகாரத்தில் வரும் குறளை எடுத்துக்கூறி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரை ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது. புதிய வருமான வரி சட்ட மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்த நிதியமைச்சர், ஏற்கெனவே உள்ள வருமான வரி செலுத்தும் நடைமுறையை மேலும் எளிமையாக்கும் வகையில் புதிய சட்ட மசோதா இருக்கும் என்று கூறினார்.

புதிய மசோதா வரி செலுத்துவோர் புரிந்துகொள்வதற்கு எளிமையாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி" என்ற குறளின் அடிப்படையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் இருக்கும் என்றார். இந்த ''வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி'' என்பதற்கு மு. வரதராசனார் விளக்கம் அளித்து இருக்கிறார்.

Explainer: பட்ஜெட்டில் அறிவித்த ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு யாருக்குப் பொருந்தும்? முழு விவரம் இதோ!

தனிநபர் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் வழங்கவதில் கவனம் செலுத்துவதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

2025 பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2 வீடுகள் வைத்திருப்பவர்கள் வருமான வரியில் சலுகை பெறலாம் என்று கூறியுள்ளார். 

ரயில்வே, விமானம், பாதுகாப்பு, விவசாயம், தொலைத்தொடர்பு, சுகாதாரத்துக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்!!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?