உக்ரைன், ரஷ்யப் போரால் உலகளவில் உணவுப்பாதுகாப்புக்கே சிக்கல் வந்துவிடும். ஏற்கெனவே உணரத் தொடங்கிவிட்டார்கள், உணவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சப்ளையில் தடை ஏற்பட்டு, விலை அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைன், ரஷ்யப் போரால் உலகளவில் உணவுப்பாதுகாப்புக்கே சிக்கல் வந்துவிடும். ஏற்கெனவே உணரத் தொடங்கிவிட்டார்கள், உணவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சப்ளையில் தடை ஏற்பட்டு, விலை அதிகரித்து உணவுப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிவிடும் என்று ஐ.நா.வின் உணவுப் பாதுகாப்புத் திட்டம் கவலை தெரிவித்துள்ளது.
முன்னாள் சோவியத் நாடான உக்ரைன், வடமெரிக்க நாடுகள் அடங்கிய நேட்டோ படையில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து 6-வது நாளாக போர் நீடித்துவருகிறது. இதுவரை பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பு நாடுகளும் சென்றபோதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைனுடன் ரஷ்யா போர் செய்துவருதையடுத்து,ரஷ்யா மீது ஐரோப்பியயூனியன் நாடுகள்,அமெரி்க்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் கடும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து கோதுமை, பார்லி உள்ளிட்ட பல்வேறு உணவுதானியங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் அதிக அளவு ஏற்றுமதியாகிறது. இப்போது இருநாடுகளுக்கு இடையிலான போரால், இந்த உணவு தானியங்கள் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டிலிருந்து உணவு தானியங்கள் இறக்குமதி செய்ய முடியாத சூழல் இருந்தால், மேற்கத்திய நாடுகள் கடுமையான உணவுச் சிக்கலில் சிக்கநேரிடும்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால் ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலைஉயர்ந்துவிட்டது, உணவுதானியங்களும், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் விலையும் அதிகரிக்கும். இதனால் உலகளவில் உணவுப்பாதுகாப்புக்கான அழுத்தத்தை அதிகரிக்கும்.
இதுகுறித்து ஐ.நா.வின் வாஷிங்டனுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் இயக்குநர் கேத்தலின் வெல்ஷ் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டது. இனிமேல் உணவுதானிய இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கு உணவுப் பொருட்கள், தானியங்கள், எண்ணெய் வித்துகள் கிடைப்பதில் சிக்கல் வரலாம். அவற்றின் சப்ளையில் தடைஏற்பட்டு விலை உயரக்கூடும்.
குறிப்பாக கருங்கடலில் சூழ்ந்த போர்மேகம் இயல்புநிலைக்கு வந்துஅங்கு வேளாண்துறை சீராக பலமாதங்கள் ஆகலாம், சண்டை முடிவுக்குவருவதைப் பொறுத்து ஆண்டுக்கணக்கில்கூட ஆகலாம். அமெரிக்கர்களுக்கு தொடர்ந்து அதிர்ச்சிகள் வரக்கூடும், கச்சா எண்ணெய்விலை உயர்வு மட்டுமல்லாது உணவுப் பொருட்கள் சப்ளையிலும் தடங்கள் ஏற்பட்டுவிலை உயரக்கூடும்
உலகளவில் உணவுப்பாதுகாப்பு பிரச்சினை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா போருக்கு முன், கொரோனா பெருந்தொற்றால் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்தார்கள், ஊதியக் குறைப்பை எதிர்கொண்டார்கள். பொருட்கள் சப்ளையில் தடை ஏற்பட்டது, உணவுப் பொருட்கள் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தது. இதனால்,மக்களுக்கு 3 வேளை உணவுக் கிடைப்பதிலும், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சிக்கல் அதிகரித்தது.
இப்போது உக்ரைன், ரஷ்யப் போரால் உலகளவில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் எண்ணெய் வித்துகள், பருப்புவகைகள் இருப்பும் குறைந்துள்ளது. ஏற்கெனவே நீடித்துவரும் ஆப்கானிஸ்தான், சிரியா, எத்யோபியா, எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளின் சிக்கல் உணவுப்பாதுகாப்பு பிரச்சினையை மேலும் அதிகப்படுத்தும்
இவ்வாறு வெல்ஷ் தெரிவித்தார்