twitter elon musk: டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் திட்டதுத்காக ஊழியர்களைப் பணயம் வைக்கமாட்டோம். ஊழியர்கள் தொடர்ந்து பணியில் கவனம் செலுத்தலாம் என்று ஊழியர்களிடம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கின் திட்டதுத்காக ஊழியர்களைப் பணயம் வைக்கமாட்டோம். ஊழியர்கள் தொடர்ந்து பணியில் கவனம் செலுத்தலாம் என்று ஊழியர்களிடம் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
எலான் மஸ்க் விருப்பம்
ட்விட்டர் சமூக வலைதளத்தை 4,100 கோடி டாலருக்கு வாங்கிக்கொள்வதாக டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் நேற்று விருப்பும் தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை விலைக்கு வாங்கினார். இதன் மூலம் அதிகமாக பங்குகளை வைத்திருக்கும் தனிநபர் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் அழைப்பு விடுக்கப்பட்டபோது, அதில் இணைவதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.
ஆலோசனை
ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் கூறியது ட்விட்டர் நிர்வாகத்துக்குள்ளும், ஊழியர்களுக்கும் பதற்றத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எலான் மஸ்க் அறிவிப்புக் குறித்து நிறுவனத்தின் ஊழியர்களிடம், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகர்வால் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஊழியர்களிடம் பராக் அகர்வால் பேசுகையில் “ வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். என்ன நடந்தாலும் ஊழியர்களாக நாம் எதையும் கட்டுப்படுத்தலாம்.
பணயம் வைக்காது
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது குறித்து நிர்வாகக் குழு ஆலோசிக்கும். ஆனால் இதற்கு மேல் ஊழியர்களிடம் ஏதும் தெரிவிக்க இயலாது. ஆனால் எலான் மஸ்க் திட்டத்துக்காக ஊழியர்களை பணயமாக நிறுவனம் வைக்காது” எனத் தெரிவித்துள்ளார்
பங்குதாரர்களின் நலன்
அப்போது ஒரு ஊழியர் எழுப்பிய கேள்வியில் “ எலான் மஸ்க் அளித்த திட்டத்துக்கு எவ்வாறு நிர்வாகம் முடிவு எடுக்கும்” எனக் கேட்டார்.
அதற்கு சிஇஓ பராக் கூறுகையில் “ அனைத்து நிர்வாகக் குழுவினரையும் அழைத்துப் பேசுவோம். நிர்வாகம் எப்போதும் பங்குதாரர்களின் நலனுக்காகவே செயல்படும். நம்முடைய சேவையை விமர்சிப்பவர்களின் குரலைக் காதுகொடுத்துக் கேட்டு, இன்னும் சிறப்பாகவும் செயல்பட முடியும், கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன