Triumph Trident 660 price : மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்திய டிரையம்ப்

By Kevin KaarkiFirst Published Feb 2, 2022, 12:32 PM IST
Highlights

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது டிரைடெண்ட் 660 மாடல் விலையை உயர்த்தி இருக்கிறது.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டிரைடெண்ட் 660 மோட்டார்சைக்கிள் விலையை உயர்த்தி இருக்கிறது. அதன்படி டிரையம்ப் டிரைடெண்ட் 660 விலை ரூ. 7.45 லட்சம் என மாறி இருக்கிறது. விலை உயர்வு ஏற்கனவே அமலுக்கு வந்து விட்டது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 6.95 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

புதிய டிரைடெண்ட் 660 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 660சிசி, இன்-லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 81 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், பை-டைரெக்‌ஷனல் குயிக் ஷிஃப்டர் விரும்புவோர் பொருத்திக் கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

இத்துடன் ரைடு-பை-வயர், ஸ்விட்ச் செய்து கொள்ளும் வசதியுடன் டராக்‌ஷன் கண்ட்ரோல், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன. இந்த மாடலில் ரோட் மற்றும் ரெயின் என இருவித ரைடிங் மோட்கள் உள்ளன. இந்தியாவில் டிரையம்ப் டிரைடெண்ட் 660 மாடல் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
 
இத்துடன் 16 ஆயிரம் கிலோமீட்டர் சர்வீஸ் இண்டர்வெல் மற்றும் இரண்டு ஆண்டுகள் / வரம்பற்ற கிலோமீட்டர்கள் வாரண்டி வழங்கப்படுகிறது. விலையை உயர்வை தொடர்ந்து டிரைடெண்ட் 660 தற்போது கவாசகி Z650, ஹோண்டா CD650R மாடல்களுக்கு இணையான விலையில் கிடைக்கிறது.

click me!