வங்கி வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி... புதிய நடைமுறை ஜூலை 1ம் தேதி முதல் அமல்..!

By Thiraviaraj RMFirst Published Jun 25, 2021, 5:06 PM IST
Highlights

ஒரு நிதி ஆண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்கள் கொண்ட காசோலைப் புத்தகத்தை தவிர்த்து வேறு காசோலை புத்தகம் வாங்கினால் ரூபாய் 40 கட்டணம் மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் 

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி மிக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட வங்கி என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சலுகை செய்வதற்கு பதிலாக கட்டணங்களை அதிகரித்துக் கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரு மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூபாய் 15 கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. வங்கியில் அல்லது ஏடிஎம் எதுவாக இருந்தாலும் நான்கு முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும் அதற்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 கட்டணம் என வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஒரு நிதி ஆண்டில் முதலில் வழங்கப்படும் 10 தாள்கள் கொண்ட காசோலைப் புத்தகத்தை தவிர்த்து வேறு காசோலை புத்தகம் வாங்கினால் ரூபாய் 40 கட்டணம் மற்றும் அதற்குரிய ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும் என்றும் எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன
 

click me!