செல்லாத நோட்டால் வீழ்ந்த  ரியல்  எஸ்டேட்  துறை ...!! எழுச்சி  பெறுமா ?

First Published Jan 11, 2017, 12:18 PM IST
Highlights


செல்லாத நோட்டால் வீழ்ந்த  ரியல்  எஸ்டேட்  துறை ...!! எழுச்சி  பெறுமா ?

ரூபாய்  நோட்டு செல்லாது என்ற  அறிவிப்பால் , மக்களிடையே  பணப்புழக்கம்  வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவு கண்டுள்ளது. அதன்படி, 23  சதவீதம் சரிவு  கண்டுள்ளது .

கடந்த ஆண்டு நிலவரம் :

விற்பனையான  கட்டிடங்கள் – மொத்தம் 8,617    - சரிவு  50  சதவீதம்

புதிய  கட்டுமானங்கள்       - மொத்தம் 2,617  - சரிவு  77  சதவீதம் .

ஒட்டுமொத்தமாக , இந்தியாவின்  அனைத்து இடங்களிலும்,  ரியல் எஸ்டேட்  துறை  சரிவு  கண்டுள்ளது.குறிப்பாக  தெற்கு மும்பையில் 54 ,  சதவீதமும் ,மத்திய மும்பையில் 41 சதவீதமும் , வீடு வாங்குவதில் விற்பனை  குறைந்துள்ளது.

வீடு விற்பனை  சரிவு :

மும்பை, டெல்லி, புனே, பெங்களூரு சென்னை உள்ளிட்ட முக்கிய 8 நகரங்களில் உள்ள  வீடுகளின் விற்பனை   வெகுவாக குறைத்துள்ளது. ரியல் எஸ்டேட்  துறையை பொறுத்தவரை , ரூபாய்  நோட்டு செல்லாது என  அறிவிக்கப்பட்ட  பின்புதான்  மாபெரும்  சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

எழுச்சி காணுமா  ரியல்  எஸ்டேட்  துறை ..?

தற்போது  சரிவுடன் காணப்படும்  ரியல் எஸ்டேட்  துறை,  இனி வரும் காலங்களில் எழுச்சி  காணுமா  என்ற  கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை உயர்வு கண்டால்,  அதற்கான  காலம்  சற்று  அதிகரிக்கும்  என  தெரிகிறது.

click me!