Gold Rate Today : மகிழ்ச்சியான செய்தி !! அதிரடியாக குறைந்த தங்க விலை.. எவ்வளவு தெரியுமா..?

By Raghupati RFirst Published Apr 4, 2022, 11:18 AM IST
Highlights

Gold Rate Today : கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. 

கடந்த வாரத்தில் உக்ரைன் - ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் வரலாற்று உச்சத்தினையே உடைத்துக் காட்டியுள்ளது. எனினும் வாரத்தின் பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டது.

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,803 ஆக குறைந்து உள்ளது. அதேபோல, நேற்று 38,600  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 176 ரூபாய் குறைந்து  38,424 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.40 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 71,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!