Petrol, Diesel Price: 12வது முறையாக தாறுமாறாக உயரும் பெட்ரோல், டீசல் விலை... இன்று எவ்வளவு தெரியுமா?

By vinoth kumarFirst Published Apr 4, 2022, 8:11 AM IST
Highlights

கடந்த 14 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.7.94, டீசல் விலை ரூ.7.99 அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்ந்து லிட்டர் 109 ரூபாய் 34 காசுகளுக்கும், டீசல்  லிட்டருக்கு 38 காசுகள் விலை  அதிகரித்து லிட்டர் 99 ரூபாய் 42 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்கள்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 130 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் நீடித்து வந்தது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் முடிவுகள் வெளியான நிலையில் கடந்த 14 நாட்களில் 12வது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர். 

தொடரும் விலை உயர்வு

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 38 காசுகள் அதிகரித்து 109.34 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 38 காசுகள் அதிகரித்து ரூபாய் 99.42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.7.94, டீசல் விலை ரூ.7.99 அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

click me!