Gold Rate Today : இல்லத்தரசிகளுக்குஅடித்த ஜாக்பாட் !! தொடர்ந்து குறையும் தங்க விலை.. எவ்வளவு தெரியுமா ?

Published : Mar 23, 2022, 10:17 AM ISTUpdated : Mar 23, 2022, 12:21 PM IST
Gold Rate Today : இல்லத்தரசிகளுக்குஅடித்த ஜாக்பாட் !! தொடர்ந்து குறையும் தங்க விலை.. எவ்வளவு தெரியுமா ?

சுருக்கம்

கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது குறைந்து உள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

இன்றைய தங்க விலை :

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,781 ஆக குறைந்து உள்ளது. நேற்று இதன் விலை 4,828 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 38,624  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 376 ரூபாய் அதிகரித்து 38,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.40 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 73,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Train Seats: ரயில்களில் சீட்கள் எப்போதுமே நீல நிறத்தில் இருக்க காரணம்? இதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்!
EPFO Pension Hike: பிஎஃப் கணக்குதாரர்களுக்கு ஜாக்பாட்.. குறைந்தபட்ச பென்சன் ₹3000 ஆக உயர்கிறதா?