
சரியும் பொருளாதாரம் :
தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று வெகுவாக சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறியும் இறங்கியும் வருகிறது. சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சரிந்துள்ளது.
இது இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை மீண்டும் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சமீபத்திய தகவலின் படி தென்இந்தியாவில் அதிக தங்கத்தை வைத்துள்ள மாநிலமாக தமிழக திகழ்கிறது.
இதனிடையே அண்மைகாலமாக உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய் ஆகிவையின் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சவரன் 40 ஆயிரத்தை எட்டியது. இதனால் இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இன்றைய தங்கம் விலை :
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,894 ஆக குறைந்து உள்ளது. நேற்று இதன் விலை 4,906 ரூபாயாக இருந்தது.
அதேபோல, நேற்று 39,248 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 96 ரூபாய் குறைந்து 39,152 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை :
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.70 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 74,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.