HDFC bank: ஆரம்பிக்கலாம்: ஹெச்டிஎப்சி வங்கிக்கு இருந்த 2 ஆண்டுகள் தடைகளை நீக்கியது ரிசர்வ் வங்கி

Published : Mar 12, 2022, 04:41 PM ISTUpdated : Mar 12, 2022, 04:42 PM IST
HDFC bank:  ஆரம்பிக்கலாம்: ஹெச்டிஎப்சி வங்கிக்கு இருந்த 2 ஆண்டுகள் தடைகளை நீக்கியது ரிசர்வ் வங்கி

சுருக்கம்

HDFC bank:  ஹெச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் 2.0 திட்டத்தை தொடங்குவற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் ரிசர்வ் வங்கி இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஹெச்டிஎப்சி வங்கி டிஜிட்டல் 2.0 திட்டத்தை தொடங்குவற்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து தடைகளையும் ரிசர்வ் வங்கி இன்று நீக்கி உத்தரவிட்டுள்ளது.

தடை

ஹெச்டிஎப்சி தனது வங்கி தொடர்பான வர்த்தகத்தைப் பெருக்குவதற்காக, டிஜிட்டல் 2.0 எனும் திட்டத்தை கடந்த 2020ம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஆனால், ஹெச்டிஎப்சி வங்கியின் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் தொடர்ந்து எழுந்ததால், டிஜிட்டல் 2.0 திட்டம், வர்த்தகப் பெருக்க நடவடிக்கை, ஐடி அப்ளிகேஷன் உருவாக்குதல் ஆகியவற்றை அறிமுகம் செய்வதை நிறுத்துமாறு ஹெச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 

ஒவ்வொரு தொழில்நுட்பப் பரிவிலும் இருக்கும் சிக்கல்களைக் களையுமாறு ஹெச்டிஎப்சி வங்கிக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அனைத்துவிதமான புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டபின், திருப்திகரமான செயல்பாடு அமையும்போது தடைகள் விலக்கப்படும் எனத் தெரிவித்தது.

கிரெட்கார்டு தடை நீக்கம்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவில்கூட, ஹெச்டிஎப்சி வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு விற்பனை செய்ய அனுமதியளித்திருந்தது. ஆனால், இந்தத் தடைகளை விலக்கவில்லை. ஹெச்டிஎப்சி வங்கிக்கு இந்த பின்னடைவுக்கு அந்த வங்கியும் பங்குதாரர்கள், நிர்வாக இயக்குநர்கள்,வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரியது.

அனுமதி

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஹெச்டிஎப்சி வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்ட அறிவிப்பில், “ வர்த்தகப் பெருக்கத்துக்காக ஹெச்டிஎப்சி வங்கி தொடங்கிய டிஜிட்டல் 2.0 திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.

சிறந்த சேவையை வழங்குவோம்

கடந்த இரு ஆண்டுகளாக இருந்த தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன என்பதை வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிவிக்கிறோம். ரிசர்வ் வங்கி வழிகாட்டலுடன் தொடர்ந்து உயர்ந்த தரத்தில் சேவைகளை வழங்கிடுவோம். ரிசர்வ் வங்கியின் தடை நீக்கத்துக்கு ஹெச்டிஎப்சி வங்கி நன்றி தெரிவிக்கிறது.

இந்த தடைக் காலத்தில் வாடிக்கையாளர்களின்  குறுகிய, நடுத்தர, நீண்டகால திட்டங்களுக்கு ஏற்றார்போல் டிஜிட்டல் தேவை வரைமுறைப்படுத்த பயன்படுத்திக்கொண்டோம். வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த முறையில் டிஜிட்டல் சேவைகளைஇனிமேல் வழங்கிடுவோம். 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?