GOLD RATE TODAY : குறையும் தங்க விலை.. தங்கம் வாங்க சரியான சான்ஸ் !!

By Raghupati RFirst Published Jan 5, 2022, 10:01 AM IST
Highlights


கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,517 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,550 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,400  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்  264  ரூபாய் குறைந்து 36,136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.70 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து  65,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!