GOLD RATE TODAY : அடேங்கப்பா !! தங்கம் இவ்வளவு விலையா ?.. இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

By Raghupati RFirst Published Dec 24, 2021, 9:58 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது மேலும் விலை உயர்ந்து உள்ளது.

ஒமிக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் சில நாட்களாக குறைந்து வந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,556 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,537 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,296  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம்  152 ரூபாய் அதிகரித்து  36,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.66.20 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து  66,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!