GOLD RATE TODAY : தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் மக்களே...தொடர்ந்து சரியும் தங்கத்தின் விலை..

By Raghupati RFirst Published Dec 21, 2021, 9:53 AM IST
Highlights

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், தற்போது படிப்படியாக விலை குறைந்து வருகிறது.

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குச்சந்தையின் வர்த்தகம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,591 ஆக குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,596 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,768 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 36,728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.70 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து  65,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

click me!