மக்களே..! சேமிப்பு திட்டத்திற்கான வட்டி அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு..!

By thenmozhi gFirst Published Sep 20, 2018, 5:53 PM IST
Highlights

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இடையே குறைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களிடேயே சேமிப்பு திட்டத்திற்கான ஆர்வம் குறையும் என கணிக்கப்பட்டு இருந்தது. 

பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் இடையே குறைக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களிடேயே சேமிப்பு திட்டத்திற்கான ஆர்வம் குறையும் என கணிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான, வட்டி விகிதம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான மூன்றாவது காலாண்டில், PPF மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என பல திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, PPF - 7.6 To 8 பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி - 8.1 லிருந்து 8.5 ஆக உயர்த்தப்பட்டது.

கிசான் விகாஸ் பத்திரம் மூலம் பெறப்படும் வட்டி - 7.3 % - 7.7 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பத்திரம் நிறைவடையும் காலமான 118 மாதத்தில் இருந்து 112 மாதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மட்டும் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிகரித்து இருந்தாலும்,  தபால் அலுவலக சேமிப்புக்கணக்கின் வட்டி விகிதம் ஏற்கனவே இருந்த மாதிரியே 4 சதவிகிதமாக மட்டுமே  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!