முடியாது… முடியாது… பெட்ரோல் விலையை குறைக்கவே முடியாது… அடம்பிடிக்கும் மத்திய அரசு!

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 8:13 AM IST
Highlights

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க முடியாது எனமத்திய அரசு தொடர்ந்து தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும், எதிர்க்கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

மத்திய அரசு, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.19.48 வீதம் உற்பத்தி வரியும், டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33 வீதம் உற்பத்தி வரி வசூலிக்கிறது. மேலும், மாநில அரசுகள் வாட் வரியை வசூலிக்கின்றன. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மமத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தாலும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் சரியான தீர்வு அல்ல.

நிதி நிலைமை வலிமை அடைந்தால் மட்டுமே வரி குறைப்பு செய்ய முடியும். அதற்கு வருமான வரி, ஜிஎஸ்டி செலுத்துவோர் எண்ணிக்கை உயர வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே ரூ.98 ஆயிரம் கோடிக்கு வருமான வரி சலுகையும், ரூ.80 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி. குறைப்பும் அளித்துள்ளது பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தபோதிலும், பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. 

பெட்ரோலிய பொருட்கள் மீது மாநில அரசுகள் 'வாட்' வரி விதிக்கின்றன. அத்துடன், மத்திய அரசின் வரியில் 42 சதவீதம் பங்கைப் பெறுகின்றன. இருந்தாலும், மாநில அரசுகளும் 'வாட்' வரியை குறைக்கும் நிலையில் இல்லை என்றனர்.

click me!