நாகரீகம் பற்றி நிர்மலா சீதாராமன் உச்சரித்த ஒற்றை வார்த்தை...!! பொங்கிய எழுந்த தமிழக எம்பிக்கள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 1, 2020, 12:36 PM IST
Highlights

சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார் அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த  எதிர்கட்சி  எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,  இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.  பின்னர் தொடர்ந்து பேசிய அவர்.

சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,  2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார் அதில் ,  உட்கட்டமைப்பு வளர்ச்சியை  வலுபடுத்துவதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடிகிறது என்றார் தொடர்ந்து கட்டமைப்புகளை  மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற அவர்,  நாடு முழுவதும் புதிதாக 5 நகரங்கள் சீர்மிகு நகரங்களாக மேம்படுத்தப்படும் என்றார்.

  

தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களுக்கு விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  27,000 கிலோ மீட்டர் ரயில்பாதை மின்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்,  ரயில்வே-க்கு சொந்தமான காலி இடங்களில் சோலார் மின் நிலையங்கள் அமைக்கப்படும்.  டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள்  முடிக்கப்படும். பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும், என்றார் அப்போது சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என்று அமைச்சர் நிர்மலா குறிப்பிட்டார் அதற்கு தமிழகத்தைச் சேர்ந்த  எதிர்கட்சி  எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,  இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.  பின்னர்தொடர்ந்துபேசிய அவர். 

ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்,  அதேபோல்  கல்விக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும் என்ற அவர்,  பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்படும். 150 பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் அமலுக்கு வரும், மற்றும் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை அமல்படுத்தப்படும் என்றார்.  

click me!