First Step : தமிழகத்தில் கால் பதிக்கும் தைவானின் செருப்பு தயாரிக்கும் நிறுவனம்!

By Dinesh TGFirst Published Apr 17, 2023, 3:58 PM IST
Highlights

Pou Chen Group உளுந்தூர்பேட்டையில் உள்ள ஆலையில் அதன் துணை நிறுவனமான High Glory Footwear மூலம் ₹2,302 கோடி முதலீடு செய்யவுள்ளது.
 

தைவானின் Pou Chen குழுமத்தின் துணை நிறுவனமான High Glory Footwear, தமிழ்நாட்டில் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது. ரூ.2,302 கோடி முதலீட்டில் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் காலணி தயாரிப்பு ஆலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Pou Chen நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜார்ஜ் லியு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Pou Chen Corporation உலகின் மிகப்பெரிய பிராண்டட் காலணி உற்பத்தி நிறுவனமாகும். 2022 இல், இது நைக், அடிடாஸ், ரீபோக் மற்றும் ஆசிக்ஸ் போன்ற டஜன் கணக்கான சர்வதேச பிராண்டுகளுக்காக 272.7 மில்லியன் ஜோடி ஷூக்களை உற்பத்தி செய்தது. உலகளவில், சீனா, வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அடுத்த 12 ஆண்டுகளில், இந்த தொழிற்சாலை மூலம் தோல் அல்லாத காலணி உற்பத்தி துறையில் சுமார் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கு உள்ளது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கும்.

 

In the presence of Hon'ble Chief Minister Thiru. M. K. Stalin, the Government of Tamil Nadu, signed an MoU with High Glory Footwear, a subsidiary of Pou Chen Corporation - the World's largest branded footwear manufacturer, with an investment commitment of ₹ 2,302 crores.
(1/2) pic.twitter.com/D9McLQC2Y8

— Guidance Tamil Nadu (@Guidance_TN)

 

தோல் அல்லாத காலணித் துறையில் தைவானின் முக்கிய நிறுவனங்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. ஃபெங் டே நிறுவனத்திற்கு பர்கூர் மற்றும் செய்யாறில் இரண்டு தொழிற்சாலைகளும், மூன்றாவது திண்டிவனத்தில் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 1,000 கோடி முதலீடு செய்யவும், 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் மாநில அரசுடன் ஹாங் ஃபூ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கூடுதலாக, கோத்தாரி-பீனிக்ஸ் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, மேலும் கோத்தாரியின் மற்ற 10 உதிரிபாக உற்பத்தியாளர்கள் 2,740 கோடி ரூபாய் முதலீட்டில் 39,500 வேலைகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M.K.Stalin (@mkstalin)

 

click me!