இன்போசிஸ் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்ன சொல்கிறார் நிபுணர்?

By Dhanalakshmi GFirst Published Apr 17, 2023, 12:57 PM IST
Highlights

எப்போதும் இல்லாத அளவிற்கு ஐடி நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன என்று அந்த நிறுவனங்களே ஒப்புக் கொண்டுள்ளன. கடந்த காலாண்டு வருமானம் குறைந்துள்ளன. 

இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் காலாண்டு அறிக்கை வெளியாகி இருக்கிறது. இது எதிர்மறை வினைகளை பங்குச் சந்தையில் ஆற்றி வருகிறது. இன்னும், ஹெச்சிஎல், ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய பங்குகளின் முடிவுகள் வெளியாகவில்லை. இவற்றின் முடிவுகள் வெளியாகும்பட்சத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு இருக்கும் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்போசிஸ், டெக் மகேந்திரா பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த இரண்டு பங்குகளின் மதிப்பும் சுமார் 7-11 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. விப்ரோ, ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் இன்று குறைந்து காணப்பட்டன. இதையடுத்து இன்று காலை முதல் பங்குச் சந்தையில் வர்த்தகம் சரிந்து காணப்பட்டது.

Gold Rate Today : தாறுமாறாக விலை குறைந்த தங்கம்.. தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான்!!

தொடர்ந்து இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு சரிந்தால் இதுதான் சரியான நேரம் என்று asksandipsabharwal.com இணையத்தின் சந்தீப் சபர்வால் தெரிவித்துள்ளார். இவர் எகனாமிக் டைம்ஸ் டிஜிட்டலுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ''முதல் காலாண்டுக்குப் பின்னர் வரும் காலாண்டு வருமானங்களில் சரிவு இருக்கலாம். இதுதான் இன்போசிஸ் பங்குகளை வாங்குவதற்கு சரியான நேரம் . இன்போசிஸ் பங்குகள் மதிப்பு 15-20 சதவீதம் குறையும்போது, இந்தப் பங்குகளின் மீது முதலீடு செய்ய ஏற்ற நேரம். இந்த நிறுவனங்கள் மீது என்னதான் நெகடிவ் கருத்துக்கள் எழுந்தாலும், அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நிறுவனங்களின் மீது எந்தக் கடனும் இல்லை. இன்போசிஸ் அதிகளவில் வருமானம் ஈட்டும் நிறுவனம். பங்குகளை திரும்பப் பெறும் அறிவிப்புகளை வெளியிடலாம்.  பெரிய அளவில் டிவிடென்ட் வழங்கலாம்'' என்று தெரிவித்துள்ளார்.

இன்ஃபோசிஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரூ 1,185.30 ஆக வர்த்தகமானது. ஏனெனில் இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனத்தின் பங்குகள் நான்காம் காலாண்டு வருவாயை விட 15% சரிந்தன. பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஸ்ட்ரீட் மதிப்பீடுகளைத் தவறவிட்டு, அதன் நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு 8% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.6,128 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் இயக்க வருவாய் 16% உயர்ந்து ரூ.37,441 கோடியாக உள்ளது. வருவாய் மற்றும் லாபம் இரண்டும் ஆய்வாளர்களின் மதிப்பீடுகளுக்குக் குறைவாகவே இருந்தன. கடன் இல்லாமல், வருமானம் இருக்கும் எந்த நிறுவனங்களின் பங்குகளும் விலை குறையும்போது வாங்கலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

ஜிஎஸ்டி விதியில் அதிரடி மாற்றம்.. மே 1 முதல் ஜிஎஸ்டி விதிகள் மாறுகிறது - முழு விபரம்

click me!