
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்விஸ் வங்கியில் கடந்த 2021ம் ஆண்டில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் வைத்துள்ள பணம் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும்.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரூ.30ஆயிரத்து 500 கோடி(3830 கோடி ஸ்விஸ் பிராங்க்) வைத்துள்னர். பங்குப்பத்திரங்கள் மூலம் பெரும்பாலும் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர்.
கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் வைத்திருந்த பணம் ஸ்விஸ் வங்கியில் ரூ.20,700 கோடியாகவும், சேமிப்புக் கணக்கில் ரூ.4,800 கோடியாகவும் இருந்தது. சேமிப்புக் கணக்கில் இருக்கும் தொகை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். இரு ஆண்டுகளாக சேமிப்பு டெபாசிட் சரிந்தநிலையில் 2021ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
2021ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருந்த தொகை 3,831.91 மில்லியன்பிராங்க. இதில் வாடிக்கையாளர் டெபாசிட்கள் மட்டும் 602.03 மில்லியன் பிராங். அதிகபட்சமாக பங்குப்பத்திரங்கள், கடன்பத்திரங்கள் மூலம்தான் இந்தியர்கள் முதலீடு செய்திருந்தனர். அதன் அளவு 2,002 மில்லியன் பிராங்காகும்
2006ம் ஆண்டு அதிகபட்சமாக 6500 கோடி ஸ்விஸ் பிராங்களை இந்தியர்கள் வைத்திருந்தனர்.அதன்பின் படிப்படியாகச் சரியத் தொடங்கியது. இதில் 2011, 2013, 2017, 2020, 2021ம் ஆண்டில் மட்டும் சரிவில் இல்லை என ஸ்விஸ் தேசிய வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் இந்தியர்கள் பணம் அனைத்தும் அதிகாரபூர்வ கணக்கில் இருக்கும் பணமாகும். இது கருப்புப்பணம் கணக்கில் வராது என்று ஸ்விஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.