
மத்திய அரசு ஊழியர்கள் விபிஎன்(VPN), கிளவ்ட் சர்வீஸ்களான கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தவும், அதில் தகவல்களைச் சேமிக்கவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய அரசின், இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் தேதிய புள்ளியியல் மையம்(என்ஐசி) ஆகியவை இணைந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மத்திய அ ரசு ஊழியர்கள் முக்கியமான, மிகுந்த ரகசியமாக வைக்கக்கூடிய ஆவணங்கள், தகவல்களை கூகுள் டிரைவ், டிராப்பாக்ஸில் சேமிக்கக் கூடாது. தங்களின் சுய விவரங்கள், தகவல்களை மட்டும் சேமிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், கணினியின் இன்டர்னல் மெமரியில் சேமிக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆவணங்கள், தகவல்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இந்த விதிகளை புகுத்தியுள்ளது. விபிஐ சேவை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக்கூடியது, தீவிரவாதிகள் அதிகமாக பயன்படுத்தும் தளம், அதைக் கண்டுபிடிப்பதும் பின்தொடர்வதும் கடினம் என்பதால் தடைவிதித்துள்ளது.
தேசிய தகவல் மையம் பிறப்பித்த உத்தரவு என்ன
1. மத்தியஅரசின் ரகசியமான மற்றும் பாதுகாக்கப்படக்கூடிய தகவல்களை அரசு ஊழியர்கள் க்ளவுட் சேவையில் சேமித்து வைக்கக் கூடாது.
2. விபிஎன் சேவை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
3. தேர்டுபார்டி அப்ளிகேஷன் மூலம் அரசு ஆவணங்கள் எதையும் ஸ்கேன் செய்யக்கூடாது.
4. அரசு ஊழியர்கள் தங்கள் கணிகளை ரூட் அல்லது ஜெயில்பிரேக் செய்யக்கூடாது.
5. நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் இந்த சைபர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
6. விபிஎன் நிறுவனங்கள் தங்களின் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
7. இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.