ஸ்விக்கியில் அம்மாவா..? ‘அம்மா முதல் பெட்ரோல் வரை.!’ 2022ல் ஸ்விக்கியில் மக்கள் தேடியது இதைத்தான்!

By Raghupati RFirst Published Dec 17, 2022, 6:58 PM IST
Highlights

2022 ஆம் ஆண்டின் வருடாந்திர ட்ரெண்ட்ஸ் அறிக்கையை ஸ்விக்கி தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் டிஜிட்டல் சேவைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது அனைவரின் கையிலும் உள்ள ஸ்மார்ட்போன்கள், டிஜிட்டல் சமூகத்தை வளர்த்துகொண்டே வருகிறது.

ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற செயலிகள் வீடு தேடி வந்து உணவு மட்டுமல்ல, மளிகை பொருட்கள் வரை கொண்டு சேர்த்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தங்களிடம் அதிகம் ஆர்டர் செய்த உணவுகள் பற்றிய தகவல்களை ஸ்விக்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

ஆகஸ்ட் 2020 இல் தொடங்கப்பட்டது, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட். இது எக்ஸ்பிரஸ் வேகத்தில் மளிகை பொருட்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய நோக்கமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தகவல்களை தற்போது ஸ்விக்கி வெளியிட்டு உள்ளது. இந்தச் சேவையானது தற்போதைய 2022 ஆம் ஆண்டில் மூன்று நகரங்களில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ

பெங்களூரில் உள்ள ஒரு வாடிக்கையாளர் ரூ.16.6 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார் என்ற ஆச்சர்ய தகவலை வெளியிட்டு உள்ளார்கள். ஸ்விக்கியின் வருடாந்திர ட்ரெண்ட்ஸ் அறிக்கையின் ஏழாவது பதிப்பான How India Swiggy’d 2022’ வாடிக்கையாளர்கள் மளிகை சாமான்களின் கீழ் வராத சில விசித்திரமான விஷயங்களையும் தேடினர் என்பதை வெளிப்படுத்திகிறது.

உதாரணமாக, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் பெட்ரோல் 5,981 முறை தேடப்பட்டது. அடுத்து உள்ளாடைகள் 8,810 முறை தேடப்பட்டுள்ளது. அதேபோல் சோபா மற்றும் படுக்கை 20,653 மற்றும் 23,432 தேடப்பட்டுள்ளது. மேற்கண்டதெல்லாம் பொருட்கள் தான். ஆனால் மக்கள் தேடிய வினோதமான விஷயம் ஒன்று ஸ்விக்கி நிறுவனத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மம்மி என்ற வார்த்தை 7,275 முறை தேடப்பட்டது என்று ஸ்விக்கி கூறியிருக்கிறது. குருகிராமைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இன்ஸ்டாமார்ட்டில் 1,542 முறை மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.இன்ஸ்டாமார்ட் மூலம், ஸ்விக்கி தனது விரைவான டெலிவரியை 1.03 நிமிடங்களில் பெங்களூரில் உள்ள ஒரு வாடிக்கையாளருக்கு 50 மீட்டர் தொலைவில் வழங்கியுள்ளது.

ஐஸ் க்யூப்ஸ் ஆர்டர் செய்வதிலும் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. மும்பை, சென்னை மற்றும் டெல்லியை விட அதிகமான ஐஸ் க்யூப்களை ஆர்டர் செய்துள்ளனர் பெங்களூரு மக்கள். 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் 3.6 கோடி சிப்ஸ் (அல்லது 3,62,10,084, சரியாகச் சொல்வதானால்) ஆர்டர் செய்துள்ளதாகவும் ஸ்விக்கி கூறியுள்ளது.

இதையும் படிங்க..தமிழ்நாட்டின் நம்பர் 1 நடிகர்.. சினிமா, அதிகாரம் எவ்வளவு நாளுக்கு? திமுகவுக்கு சவால் விடும் அண்ணாமலை

click me!