துள்ளிக் குதித்த காளை; மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்; சென்செக்ஸ் நிப்டி உயர்வுக்கு இதுதான் காரணம்!!

By Dhanalakshmi G  |  First Published May 23, 2024, 3:15 PM IST

இந்தியப் பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 75,000 புள்ளிகளும், 50 பங்குகளைக் கொண்ட நிப்டி ஏறக்குறைய 23,000 புள்ளிகளை தொட்டு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 


இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் மதியம் 2.35 மணிக்கு 1.30 சதவீதம் உயர்ந்து 75,182 புள்ளிகளைத் தொட்டது. அதேபோல் 50 பங்குகளைக் கொண்ட நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தை முதன் முறையாக 1.6 சதவீதம் உயர்ந்து 22,959.70 புள்ளிகளைத் தொட்டது. நிப்டி மிட்கேப் மற்றும் சுமால்கேப் இன்டெக்ஸ் 0.30 மற்றும் 0.05 ஆக உயர்ந்து காணப்பட்டது. 

இந்திய பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம்?

Latest Videos

undefined

தேர்தல் குறித்த செய்திகள் இன்றைய பங்குச் சந்தை உயர்வுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதமாக இருக்கும் என்றும், நிலையான அரசு மத்தியில் அமையும் என்ற கருத்தால் பங்குச் சந்தை உயர்வதாக சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தரமான பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், நீண்ட காலத்தை குறிவைத்து முதலீடு செய்து வருகின்றனர். 

குறுகிய காலத்தில் தேர்தல் முடிவு எதிர்பார்ப்புகளை வைத்து நிப்டி விரைவில் 23,000 புள்ளிகளை தாண்டலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் பிரச்சனையா.? இனி கவலையே வேண்டாம்.. இந்திய ரயில்வேயின் அசத்தல் பிளான்..

இந்திய ரிசர்வ் வங்கி:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மத்திய அரசுக்கு 2024ஆம் நிதியாண்டுக்கு ரூ. 2.11 லட்சம் கோடி ஈவுத்தொகையை (டிவிடென்ட்) அறிவித்துள்ளது. இதுவும் இன்றைய பங்குச் சந்தை ஊக்கம் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.  இது இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும்,  நிதியாண்டு 2025-ல்  நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய நிதியமைச்சகத்துக்கு உதவும்.  

சந்தைக்கு மிகப்பெரிய சாதகமாக, ரிசர்வ் வங்கியிடமிருந்து மத்திய அரசுக்கு ரூ. 2.11 லட்சம் கோடி ஈவுத்தொகை கிடைத்துள்ளது. இது அரசுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி நிதியில் 0.3 சதவீதத்தை அதிகரிக்கும். இந்த நிதியைக் கொண்டு நிதிப் பற்றாக்குறையை குறைக்கலாம் மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரிக்கலாம் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விமான பயணத்தின் போது இந்த பொருட்களையெல்லாம் எடுத்து செல்லக்கூடாது..மீறினால் அபராதம்..

வங்கி பங்குகள் உயர்வு:
ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி பங்குகளின் மதிப்பு இன்றைய சந்தையில் உயர்ந்து காணப்பட்டது. மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈவுத்தொகை அறிவித்து இருப்பதால், 10 ஆண்டுகள் கடன் பத்திரங்களின் மதிப்பு இன்று சரிந்தது. கடன் பத்திர வருவாய் குறைவு வங்கி பங்குகளின் மதிப்பு உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. நிப்டியில் வங்கி இன்டெக்ஸ் 2 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது.

முதலீடு செய்யும் இந்தியர்கள்:
உள்நாட்டு முதலீட்டாளர்கள் பெரிய அளவில் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர். அதேசமயம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று வருகின்றனர். கடந்த மே 22 வரை இந்திய பங்குச் சந்தையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 38,331 கோடிக்கு முதலீடு செய்துள்ளனர். அதேசமயம் இந்த மாதத்தில் இதுவரை வெளிநாட்டு முதலீட்டளர்கள் இந்தியப் பங்குச் சந்தையில் ரூ. 38,186 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர்.

click me!