
உருக்கு டிஎம்டி கம்பிகள், தகடுகள், ராடுகள் உள்ளிட்ட உருக்குப் பொருட்களின் விலையை டன்னுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8ஆயிரம் வரை உருக்கு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன
இந்த விலை உயர்வால், கோல்டு-ரோல்ட் காயில் விலை இதுவரைஇல்லாத அளவு டன் ரூ.65ஆயிமாக அதிகரித்துள்ளது. சந்தையில் உருக்கான மூலப்பொருட்கள் விலை கடுமையாக விலை உயர்ந்ததையடுத்து, கம்பிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
அதுமட்டும்லலாமல் உக்ரைன் மீது ரஷ்யா படையயெடுத்ததால், விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகளவில் உருக்கு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நாடு ரஷ்யா, இந்த பொருளதாராத் தடையால் உருக்கு இறக்குமதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆவ்னர் கேபிடல் நிறுவனத்தின் சிஇஓ ஷவம் பஜாஜ் கூறுகையில் “ உருக்கு ஏற்றுமதியில் ரஷ்யா முன்னணி நாடு, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உருக்கு ஏற்றுமதி உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பியபின்புதான் உருக்குவிலை குறையும்.
உருக்கின் தேவையும் குறைவாக இருக்கிறது, பலரும் உருக்குப்பொருட்கள் வாங்குவதைக் குறைத்துள்ளனர். இதனால்தான் முகவர்கள் உருக்குப் பொருட்கள் இருப்பு வைப்பதை கவனமாகக் கையாள்கிறார்கள். திடீரென உருக்கு விலை சரிந்துவிட்டால், இழப்பு ஏற்பட்டுவிடும்”எ னத் தெரிவித்தார்
மோதிலால் ஓஸ்வால் நிதிச் சேவையின் அறி்க்கையில் “ உருக்கு பொருட்களை ரஷ்யாவிலிருந்து கப்பல்மூலம் கடல்மார்க்கமாகத்தான் கொண்டுவர முடியும். ஆனால், போர் முடிந்தாலும் ஏற்றுமதி நடக்க சில மாதங்கள் ஆகலாம் என்பதால், உருக்கு, ஸ்டெயின்லஸ் ஸ்டீல், நிக்கல் பொருட்கள் விலை உயரும்” எனத் தெரிவித்துள்ளது.
உருக்கில் ஹெச்ஆர்சி டன் ரூ.66ஆயிரமாகவும், உருக்கு டிஎம்டி கம்பிகள் டன் ரூ.65ஆயிரமாகவும் அதிகரித்துள்ளது.
உருக்குப் பொருட்களை உருக்குவதற்கு முக்கிய மூலப்பொருட்களான நிலக்கரி கோக், ரஷ்யா, உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த போரால் ரஷ்யாவிலிருந்து கோக் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதால், விலை அதிகரித்துள்ளது. கோக் விலை அதிகரிப்பால் உருக்குப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
டாடா ஸ்டீல் சிஇஓ டிவி நரேந்திரன் கூறுகையில் “ உருக்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ரஷ்யா, உக்ரைன் நாடுகள்முக்கியமானவை. நிலக்கரி, இயற்கை எரிவாயுவும் அதிகமாக சப்ளை செய்கிறார்கள். இருநாடுகளுக்கு இடையிலான போர், சப்ளையில் தேக்கத்தையும், தடையையும் ஏற்படுத்தி, உள்ளீட்டுச் செலவைஅதிகப்படுத்தி, ஒட்டுமொத்த விலைவாசியை ஏற்றியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.