sri lanka economic crisis: அதளபாதாளத்தில் பொருளாதாரம்: இலங்கை கைஏந்தும் நிலை; சர்வதேச நிதியம் அறிக்கை

By Pothy Raj  |  First Published Mar 26, 2022, 4:33 PM IST

sri lanka economic crisis:இலங்கை அரசு கட்டுப்படுத்தமுடியாத கடனில் சிக்கியிருப்பதால், அதிலிருந்து தப்பிக்க தன்னிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விட அதிகபட்சமாக கடன் பெறும் கடளிப்பு(solvency) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.


இலங்கை அரசு கட்டுப்படுத்தமுடியாத கடனில் சிக்கியிருப்பதால், அதிலிருந்து தப்பிக்க தன்னிடம் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விட அதிகபட்சமாக கடன் பெறும் கடளிப்பு(solvency) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று சர்வதேச நிதியம்(ஐஎம்எப்) தெரிவித்துள்ளது.

பொருளாதாரம் மோசம்

Latest Videos

undefined

இலங்கைப் பொருளாதாரம் மிகவும் மோசான நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. இறக்குமதி அதிகரித்து, அன்னியச்செலவாணி கையிருப்பு குறைந்து வருகிறது. உள்நாட்டிலும் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு, தானியங்கள்,அரிசி, பருப்பு விலையும் உயரத்தொடங்கியது.

நாளுக்கு நாள் இலங்கையின் பொருளாதாரம் சரிந்து, கடந்த பிப்ரவரி மாதம் 2,310 கோடி டாலர் அன்னியச் செலாவணி மட்டுமே கையிருப்பு இருந்தது. அமெரிக்கடாலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பும் 285 ரூபாய்க்கும் மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசியாவிலேயே மிக அதிகபட்சமாக இலங்கையில் பணவீக்கம் 15.1% இருக்கிறது, உணவுப்பணவீக்கம் 25% அதிகரித்துள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

சர்வதேச நிதியம்

இதனால் இலங்கை அரசு சர்வதேச நிதியத்திடம் நிதியுதவி கேட்க உள்ளது. இதற்காக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, விரைவில் ஐஎம்எப் அதிகாரிகளைச் சந்திக்க வாஷிங்டன் செல்ல உள்ளார். இதனிடையே ஐஎம்எப் இலங்கை பொருளாதாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சால்வன்சி சிக்கல்

எங்களுடைய  அதிகாரிகளின் ஆய்வுகளின்படி, கடனைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பான நிலைக்கு இலங்கையைக் கொண்டுவருவதற்கு நிதி ஒருங்கிணைப்பு அவசியம். அதற்காக இலங்கை அரசுக்கு அதனிடம் இருக்கும் சொத்து மதிப்பை அளவுக்கு அதிகமாக அட்ஜெஸ்ட்மெண்ட் மூலம் கடன் அளிக்க வேண்டியுள்ளது. இலங்கை சால்வென்சி சிக்கலை சிந்திக்கிறது தெளிவாகிறது. 

இலங்கை அரசு நிதியில் நிலைத்தன்மையை ஏற்படுத்த  நம்பகத்தன்மையான, ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமாகும். இலங்கையின் கடன் எல்லைமீறிச் சென்றுவிட்டது. இந்த அளவுக்கதிமான கடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், நிலைத்தன்மையையும் குறுகிய காலத்திலும், நீண்டகாலத்திலும் பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு 700 கோடி டாலர்அளவுக்கு கடன் வழங்க வேண்டும். 

காரணம் என்ன

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சுற்றுலாப்ப யணிகள் வருகை குறைந்தது, ரஷ்யா உக்ரைன் போரால் பயணிகள் வரத்து குறைவு, அன்னியச்செலவாணி பற்றாக்குறை ஆகியவைதான் இலங்கையை பெருங்கடனில் தள்ளின. 

இலங்கைக்கு 390 கோடி டாலர் கடன் இருக்கிறது, ஆனால் கைவசம், 200 கோடி டாலர் மட்டுமே அன்னியச்செலவாணி கையிருப்பு இருக்கிறது. சர்வதேச நிதியத்திடம் இணைந்து செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!