sovereign gold bond: தங்கத்தை நகையாத்தான் வாங்கணுமா! 2022-23 தங்கப்பத்திர விற்பனை வரும் 20ம் தேதி தொடக்கம்

Published : Jun 18, 2022, 03:34 PM IST
sovereign gold bond: தங்கத்தை நகையாத்தான் வாங்கணுமா! 2022-23 தங்கப்பத்திர விற்பனை வரும் 20ம் தேதி தொடக்கம்

சுருக்கம்

sovereign gold bond: Sovereign Gold Bond Scheme 2022-23: 2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme )  விற்பனையை ரிசர்வ் வங்கி வரும 20ம் தேதி தொடங்குகிறது. இந்த விற்பனை 4 நாட்கள் நடக்கிறது.

2022ம் ஆண்டுக்கான தங்கப்பத்திரம்(sovereign gold bond scheme )  விற்பனையை ரிசர்வ் வங்கி வரும 20ம் தேதி தொடங்குகிறது. இந்த விற்பனை 4 நாட்கள் நடக்கிறது.

தங்கப்பத்திரங்கள் வாங்குவோருக்கு வரும் 28ம்தேதி தங்கப்பத்திரங்கள் வழங்கப்படும். 

கடந்த 2015ம் ஆண்டில் தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. உண்மையான தங்கத்தின் பயன்பாட்டைக் குறைக்கவும், அதேசமயம், தங்கத்தின் மதிப்புக்கு உரிய பலன் அளிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. 
கடந்த 7 ஆண்டுகளாக  தொடர்ந்து தங்கப்பத்திரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கி 11-வது சீரிஸ் தங்கப்பத்திரங்களை வரும் 20ம் தேதி முதல் 24ம் தேதிவரை விற்பனை செய்கிறது.

இந்த தங்கப்பத்திரம் சேமிப்புத் திட்டத்தில் ஒரு கிராம்தங்கத்தின் விலை ரூ.5,091 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் தங்கப்பத்திரத்துக்கு விண்ணப்பம் செய்வர்களுக்கு கிராம்ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி தரவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள்ளது. அவ்வாறு ஆன்-லைனில் விண்ணப்பித்தால் அவர்களுக்கு கிராம் ரூ.5,041 ஆக நிர்ணயிக்கப்படும்.

இந்த தங்கப்பத்திரங்களை எஸ்ஹெச்சிஐஎல், குறிப்பிட்ட சில தபால்நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குபரிவர்த்தனை மையம், தேசிய பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தையில் விற்பனையாகும். 

இந்த தங்கப்பத்திரத்தின் முதிர்வுகாலம் 8 ஆண்டுகளாகும். 5-வது ஆண்டில் தங்கப்பத்திரத்தை அளித்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும். 8வது ஆண்டில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தங்கம் போலஇந்த  பத்திரத்தையும் வங்கியில் அடகுவைத்து பணம் பெற முடியும். தங்கத்துக்கு என்ன மதிப்போ அதே மதிப்பை வங்கி வழங்கும்.

ஒருநபர் குறைந்தபட்சமாக ஒரு கிராமும், அதிகபட்சமாக ஓர் ஆண்டில் 4 கிலோவும் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5%வட்டி கிடைக்கிறது.

தங்கத்தை பொருளாக வைக்காமல் டிஜிட்டல் முறையில் வைப்பதால், பாதுகாப்பது எளிதானது. 6 மாதத்துக்கு ஒருமுறை வட்டித்தொகை கணக்கில்  செலுத்தப்படும், 8  ஆண்டுகளுக்குப்பின் அன்றைய தங்கத்தின் விலைக்கு நிகாரக  பணம்கிடைக்கும்.
இந்த தங்கப்பத்திரத்தை வாங்க விருப்பம் உள்ளவர்கள், பான்கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்குப்புத்தகம், அடையாள அட்டை இதில்ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். இதில் ஏதாவதுஒன்றின் நகலை எடுத்து, தபால் நிலையத்தில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்கப்பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.

2-வது கட்ட தங்கப்பத்திரங்கள் விற்பனை ஆகஸ்ட் 22ம் தேதிமுதல் 26ம் தேதி வரை நடக்கிறது. 2021-22ம்ஆண்டில் 10 தவணைகளில் தங்கப்பத்திரங்கள் ரூ.12,991 கோடிக்கு, (தங்கத்தின் எடைமதிப்பில் 27 டன் விற்பனை) விற்கப்பட்டது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிகரெட், புகையிலை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பிப். 1 முதல் விலை ஏறுது.. புதுசா 'சுகாதார வரி' வருது!
பான்-ஆதார் இணைப்பு தேதி முடிந்து விட்டதா..? இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா..?