
உலகளவில் 2வது மிகப்பெரிய லீக்போட்டியான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு ஏலத்தில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென ஏலத்திலிருந்து விலகியது. இதையடுத்து, அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 300 கோடி டாலருக்கு ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அடுத்த 5 ஆண்டுகளுக்குக் கைப்பற்ற முகேஷ்அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், அமேசானின் ஜெப் பிஜோஸும் போட்டியிடுகிறார்கள் என்று தொடக்கத்தில் பேசப்பட்டது. ஆனால், திடீரென அமேசான் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை போட்டியிலிரிருந்துவிலகிக்கொணடது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அமெரிக்க ஊடக நிறுவனமான பாராமவுண்ட் குளோபல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற நினைத்தன. டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்றினால், அடுத்த 5 ஆண்டுகளில் விளம்பர வருவாய் 4 மடங்கு அதிகரிக்கும் எனத் திட்டமிட்டன. ஆனால், தொலைக்காட்சி உரிமையை வென்றால், அதனால் கிடைக்கும் வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்பதால் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், வயாகாம்18மீடியா, அம்பானி-பாராமவுண்ட் ஆகியவை முதலில் தொலைக்காட்சி உரிமத்துக்குதான் போட்டியிட்டாலும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை மீது இந்த நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக வயாகான்18 நிறுவனம் 3100 கோடி டாலருக்கு ஐபிஎல் டிஜிட்டல் உரிமையை வென்றது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தை பெறும் என எதி்ர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியிலிருந்து விலகியது. ரிலையன்ஸின் ஜியோ தளத்திலும் நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதை வேறுவிதமாக பயன்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணியதுதான் ஏலத்திலிருந்து விலகக் காரணமாகக் கூறப்படுகிறது. அதாவது ஜியோதளத்தில் கூடுதலாக பொழுதுபோக்கு அம்சங்களையும், இ-வர்த்தகத்தையும் மேம்படுத்த எண்ணியது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஏலத்தில் இருந்து ரிலையன்ஸ் நிறுவனம் விலகியதால், கோடிக்கணக்கான டாலர்கள் அந்த நிறுவனத்துக்கு சேமிக்கப்பட்டது. இந்த டாலர்கள் அனைத்தையும், அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் 5ஜி ஏலத்துக்கு திருப்பவும் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம், 5ஜிஅலைக்கற்றை ஏலத்தில் வெற்றிகரமாக முடித்தால், அடுத்துவரும் ஐபிஎல் போட்டித் தொடர்களை பார்க்க வாடிக்கையாளர்கள் ஜியோ நெட்ஒர்க்கவே தேர்வு செய்வார்கள்.
அப்போது ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஜியோ தளத்தில் மின்னணு வர்த்தகம், பொழுதுபோக்கு அம்சம் அனைத்தின் வர்த்தகமும் உயரும்.
ஸ்மார்ட்போனில் ஐபிஎல் பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, டேட்டாவுக்காக அதிகமாகச் செலவிடுவார்கள், டேட்டா விற்பனை அதிகரிக்கும். இதன் மூலம் ஜியோ நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் ரிலையன்ஸ் விலகவில்லை. அதைவிட பெரிய ஆதாயம் கிடைக்கும் பிரிவை பார்த்தவுடன் ஏலத்திலிருந்து ஒதுங்கிக்கொண்டது அவ்வளவுதான். இதனால்தான் முகேஷ் அம்பானியின் நாட்டின் முதல் கோடீஸ்வரராக இருக்க முடிகிறது, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் ஆண்டுதோறும் லாபத்தை கொழிக்கிறது
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 90 கோடி மக்கள் இன்டர்நெட் பயன்படுத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டேட்டா இல்லாமல் இன்டர்நெட் இல்லை, ஆதலால், இன்டர்நெட்டுக்கு மூலமான டேட்டா, ஸ்பெக்ட்ராம் தேவை என்பதால், அம்பானி 5ஜி ஏலத்தில் கவனம் செலுத்துகிறார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.