நாடு முழுவதும் தங்கப்பத்திரம் விநியோகம் தொடக்கம்: என்னென்ன நன்மைகள்?

By Manikanda Prabu  |  First Published Dec 18, 2023, 4:40 PM IST

நாடு முழுவதும்  உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது


நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைத்திருந்தால் இது உங்களுக்கான செய்திதான். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கப் பத்திரங்களை வெளியிட்டு அதன் விலையை கிராம் ஒன்றுக்கு ரூ.6,199 என நிர்ணயித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும்  உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரங்கள் விநியோகம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரத் திட்டம் (SGB) 2023-24 தொடர்-3ஆனது டிசம்பர் 18 ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரை முதலீட்டிற்கு திறந்திருக்கும். இந்த நாட்களில் தங்கப் பத்திரங்களில் பொதுமக்கள் முதலீடு செய்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 999 தூய்மை கொண்ட தங்கப் பத்திரங்களின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அடுத்த தொடர் தங்க பத்திரங்களை பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வெளியிட ரிசர் வங்கி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தங்கப் பத்திரத்திற்கான முதலீட்டு வரம்புகள் என்ன?


தங்கப்பத்திரங்களில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்த பத்திரங்கள் கிராம் தங்கத்தின் மடங்குகளில் குறிக்கப்படுகின்றன, குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட முதலீடு 1 கிராம் தங்கமாகும். தனிநபர்கள் அதிகபட்சமாக 4 கிலோ தங்கம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அதே சமயம் அறக்கட்டளைகள் மற்றும் ஒத்த நிறுவனங்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 கிலோ வரை தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.

பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா? மத்திய அரசு பதில்!

தங்கப் பத்திரத்திற்கான முதிர்வு காலம் என்ன?


தங்கப்பத்திரங்கள் சேமிப்பு திட்டத்திற்கு (SGB) 8 ஆண்டுகள் முதலீடு காலம் ஆகும். ஐந்தாம் ஆண்டுகளில் விலக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதங்களுக்கு ஒருமுறை (ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில்) பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

தங்கப் பத்திரங்களை எங்கு வாங்கலாம்?


தங்கப் பத்திரங்களை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SHCIL), தபால் நிலையங்கள், தேசிய பங்குச் சந்தை (NSE), மும்பை பங்குச் சந்தை (BSE) உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் மூலம் வாங்க முடியும்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.50 தள்ளுபடி


ரிசர்வ் வங்கியுடன் இணைந்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் பணம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அத்தகைய முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை கிராம் ஒன்றுக்கு ரூ.6,149 ஆக இருக்கும்.

click me!