இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் மகள் சனா தனது 21 வயதில் பல லட்சங்களில் சம்பளம் பெறுகிறார். அவர் என்ன வேலை செய்கிறார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஒரு காலத்தில் சரிந்து கிடந்த இந்திய அணியை தூக்கி நிறுத்தியதில் முதன்மையானவர். ரசிகர்களால் 'தாதா' என்று அழைக்கப்படும் சவுரவ் கங்குலி கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 16 சதங்களுடன் 7,000க்கும் மேற்பட்ட ரன்களும், 50 ஓவர் போட்டிகளில் 22 சதங்களுடன் 11,300 ரன்களும் கங்குலி எடுத்துள்ளார்.
பிசிசிஐ தலைவராக பதவி வகித்த சவுரவ் கங்குலி மேற்கு வங்க மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 2015ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார் கங்குலியின் மனைவி நடனக்கலைஞர் டோனா. இவர்களுக்கு 21 வயதில் சனா என்ற மகள் உள்ளார். அம்மாவை போலவே சிறு வயது முதலே நடனக்கலையில் ஆர்வம் கொண்ட சனா, பள்ளிகளில் படிக்கும்போது நடனமாடி உலகப்புகழ் பெற்றார்.
பொதுவாக பெரிய பிரபலங்களில் வாரிசுகள் தந்தையின் தொழிலை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் சனா தனக்கென்று ஒரு பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள லொரேட்டோ ஹவுஸ் பள்ளியில் படித்த சனா, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் (யுசிஎல்) பொருளாதாரத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
ஆனால் சனா, பல்கலைக்கழக படிப்பு முடிப்பதற்கு முன்பே அவர் பெரிய எம்என்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது. அதாவது அவர் கடந்த 2022ம் ஆண்டு முதல் PwC நிறுவனத்தில் இன்டர்னாக (பயிற்சியாளராக) பணிபுரிந்துள்ளார். இந்த நிறுவனத்தில் பயிற்சியாளர் பணிக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனம் மட்டுமின்றி HSBC, KPMG, Goldman Sachs, Barclays, ICICI போன்ற பெரிய நிறுவனங்களிலும் சவுரங் கங்குலியின் மகள் சனா பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது Deloitte இல் நிறுவனத்தில் சனா பணிபுரியும் நிலையில், அங்கு அவருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.